Skip to main content

திருடியவனுக்கே நகை கொடுத்த கோவிந்தன் காரணம் என்ன ?


                “கழுகுக் கண்களால் வீடு முழுவதையும் அளந்த இன்ஸ்பெக்டருக்கு ஒரு தடயமும் கிடைக்கவில்லை. உதட்டை சுழித்தார்
https://ennathuli.blogspot.com
திருடியவனுக்கே நகை கொடுத்த கோவிந்தன் காரணம் என்ன ?

                                ஸார், எங்க வீட்டுல சிசிடிவி கேமரா கூட பொருத்தியிருக்கோம், அப்படி இருந்தும்….இப்படி நடந்து போச்சே ஏன் ஸார், ஒரு தடயமும் கிடைக்கலையா,  சோகம் அப்பிய முகத்தோடு கேட்டான் கோவிந்தன்.ennathuli திருடியவனுக்கே நகை கொடுத்த கோவிந்தன் காரணம் என்ன ?       



                           இருபது வருஷமா  என் மனைவி சிறுக சிறுக சேர்த்து வைச்ச நகைகள் ஐம்பது பவுன்  ஸார். கவர்மென்ட் கணக்குப்படி இன்னும் பத்துபவுன் இரண்டு வருஷத்திலே சேர்த்திடுவேன்சொல்லிட்டுதான் அவ அவங்க அம்மா வீட்டுக்கு போனா.. அவ திரும்பி வருவதற்குள்ளே இப்படி ஆயிடுச்சே இன்ஸ்பெக்டர் என்று கண்கலங்க கோரிக்கை கொடுத்தான் கோவிந்தன்.
                                கவலைப்படாதீங்க  மிஸ்டர் கோவிந்து, நீங்க நேர்மையா சேர்த்த நகையிது, நிச்சயமாய் கிடைச்சிடும் நாங்க எவ்வளவு சீக்கிரமா கண்டுபிடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரமா கண்டுபிடிச்சுடுறோம்என்று ஆறுதலளித்தார்.short stories
                         ஆறுமாதங்கள் கடந்த பின்னும்…… இன்ஸ்பெக்டரின் வாயிலிருந்து வார்த்தைகள் மட்டும் நம்பிக்கையாக வந்து கொண்டிருந்த்து. நகைகள் வந்தபாடில்லை.
                                நகைகள் காணமால் போனதில் இருந்து, கோவிந்தின் மனைவியிடமிருந்துதுப்புகெட்ட மனுஷன்யா நீ, நீயும் சேமிக்காமா செலவழிச்சே, நான் சேர்த்து வைச்சதையும் கோட்டை விட்டுட்டியேஅப்படின்னு தினம் தினம் ஏழுமலையானின் சுப்ரபாதம் போல, அர்ச்சனைகள் அளவில்லாமல் விழுந்து கொண்டே இருந்தன.motivated stories
                                வழக்கமான அர்ச்சனைகளை வாங்கி விட்டு அலுவலகம் போன கோவிந்த் ஆபிஸ் அலமாரியை அடுக்கி வைக்கும் பொழுது….. அலமாரியில் கட்டுக்கட்டாய்ஆதார் கார்டுக்கான ஆவணங்கள், புகைப்படங்கள் இருந்தன.
                                அதனைப் பார்த்தவுடன் மின்னலாக ஒரு யோசனை உதித்த்து. உடனே அத்தனை ஆவணங்களையும் வீட்டிற்கு கொண்டு போய்…… தனது வீட்டில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஒத்திட்டு பார்த்தான்.
                                ஆதார் கார்டுக்கான ஆவணங்களின் கட்டுக்கள் குறைந்தனவே தவிர, குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை. இன்னும் இரண்டு கட்டுக்கள் இருக்கின்றன பார்த்து விடுவோம் என பார்க்கும் போது….. ”கோவிந்தனின் மனைவிஎப்ப பார் ஆபிஸ் வேலை….இப்போ அந்த வேலையை வீட்டிலேயேயும் பார்க்க ஆரம்பிச்சாச்சா  அவனைப் புரிந்து கொள்ளாமல் புலம்பினாள்.
                                                “““ ஒரு ஆவணம் எடுத்தான்,… அடுத்துஅடுத்து…” இந்த ஆவணத்தில் உள்ள விவரமும், தன்னுடைய சிசிடிவி பதிவு விவரமும் ஒத்துப்போய் விட்டதே” ”சபாஷ் கோவிந்தாதனக்குத்தானே  தலையில் செல்லமாய் கொட்டிக் கொண்டான்.
                                                அடுத்த நொடி….”இன்ஸ்பெக்டர் ஸார், இப்போ ஒங்க ஸ்டேஷனுக்கு நானே வர்ரேன், திருடனை நானே கண்டுபிடிச்சிட்டேன். நகையை மட்டும் மீட்டு  குடுத்துடுங்கோஎன்றான்.
                                                மிஸ்டர் கோவிந்து, நாங்களே திணறுறோம், நீங்க எப்படி கண்டுபிடிச்சுங்கோஎன்ற இன்ஸ்பெக்டருக்குஸார் நேர்ல வந்து சொல்றேன்என்று போலிஸ் ஸ்டேஷனுக்கு கிளம்பினான்.
                                                 போலிஸ் ஸ்டேஷனில்……இவன் கையில் இருந்த ஆவணத்தையும்,  சிசிடிவி கேமிரா பதிவில் தெரிந்த நபரின் பதிவையும் கொடுத்தான்.
                                                 இன்ஸ்பெக்டருக்கு அதிர்ச்சி, என்ன மிஸ்டர் கோவிந்து, அந்த ஆள்தான் முகமே தெரியாத அளவுக்கு…. துணியால மறைச்சிருக்கானேஎப்படி கண்டுபிடித்தீர்கள்.
                                                இன்ஸ்பெக்டர் ஸார், அவன் முகம் முழுக்க மறைச்சிருக்கலாம்…. ஆனா, அவனோட கண்கள்…. கண்களில் உள்ள கருவிழிகள்அதுதான் காட்டிக் கொடுத்திடுச்சேஎன்று இன்ஸ்பெக்டருக்கு கோவிந்தன் விளக்க…” ”, ஜீப்பீல் கோவிந்தனையும் கூட்டிக்கொண்டு ஒரு குறிப்பிட்ட ஏரியாவை சொல்லி அங்கு போனார்கள்.useful tips
                                                                அங்கு ஒரு வீட்டின் முன்னால் கயிற்றுக்கட்டிலில் போதையில் அரைகுறை லுங்கியோடு,……….. ”திருடனா பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாதுபாடலை உறாயாக கேட்டுக் கொண்டிருந்தவனை ஜீப்பில் அள்ளிப் போட்டுக் கொண்டு ஸ்டேஷனில் விசாரித்தால்” ”ஆமாங்க எசமான் நான்தான் திருடினேன்என் வீட்டு தண்ணீ பானைல இருக்குஅதில ஒரு ரெண்டு பவுனு மட்டும் குறையும் சாமி என்றான்.
                                                    ஏன்டா அந்த ரெண்டு பவுனு எங்கேடா வித்தே சொல்லு மிரட்டஅந்த இரண்டு பவுனு…. என்னோட  மருமகன் ரவுசு தாங்காம மகளுக்கு கொடுத்திட்டேன்.
                                        ஏன் சாமீ, விஞ்ஞான யுகத்துல புதுபுதுசா கண்டுபிடிச்சு எங்க புழைப்பை கெடுக்குறது நியாமா ?  அது சரி சாமீ, நாந்தேன் அடையாளமே தெரியாதமாதிரிதானே திருடிட்டு வந்தேன் எப்படி கண்டுபிடிச்சீங்க தெரிஞ்சுக்கலாமா ? –ன்னு கேட்டான்.kavidhaigal
                                                                டேய் திருடிட்டு நியாயமா பேசறே…… ஒன்னோட கண்ணுதான்டா காட்டிக் கொடுத்திடுச்சு. அதுவும் நகையை திருட்டு கொடுத்தவரே, கண்டுபிடிச்சுட்டார்ன்னா பார்த்துக்கோ. அறிவியல் எவ்வளவு முன்னேறி இருக்கு,… நேர்மையான தொழிலா செஞ்ச முன்னேற வழியப் பாருலாக்கப்பில் பூட்டினார் இன்ஸ்பெக்டர்
                                                மிஸ்டர் கோவிந்தன் எங்க வேலைய நீங்க சுலபமாக்கீட்டீங்க, இந்தாங்க ஒங்க நகைகள்என்று ஒப்படைத்தார். இன்ஸ்பெக்டருக்கு கைக்கொடுத்து விட்டு லாக்கப்பில் உள்ள திருடனிடம், அந்த ரெண்டு பவுன் நகையை  நீ திருடினதா நினைக்க மாட்டேன், நானே ஒன் பொண்ணுக்கு கொடுத்த்தா நினைச்சுக்கிறேன்என்று கோவிந்தன் சொன்ன பொழுது….. லாக்கப்பில் இருந்தவனின் இருவிழிகளில் இருந்து முத்துமுத்தாய் கண்ணீர் விழுந்தன.

                                                            

Comments

Popular posts from this blog

கன்னியும் புத்தகமும்

  கன்னியும் புத்தகமும்   புத்தகம் இதழ்களால் ஆனது கன்னியின் இதழ்களால்   ஆனதே   பக்கங்களை எச்சில் தொட்டு புரட்டுவது சிலரின் பழக்கம் கன்னியின் இதழ்கள் எச்சில் ஆக்குவது முத்தமாகும்   புத்தகம் நூறு ஆசிரியருக்கு இனணயாம் கன்னியும் நூறு ஆசிரியருக்கு இனணயே கலவிக் கல்வியில்   அச்செழுத்துக்கள் கண்ணைக் கவரும் “இச்”செழுத்துக்கள் கன்னத்தைக் கவருமே                

ஜோக்கீரர் – நகைச்சுவை கதை

                     ஜோக்கீரர் – நகைச்சுவை கதை               ” ஆயிராமாச்சே .. ஆயிரமாச்சே ! ” சோக்கா ! சோக்கா ! எனக்கே கிடைக்கணும் .. எனக்கே கிடைக்கணும் . வர மாட்டீயே எங்கேய்யா போனே !

தட்சினை ஒரு பக்க கதை

  கழுத்துல பொ p ய டாலா ; பதித்த தங்க செயின்இ நான்கு விரல்களிலும் மோதிரங்கள் மின்னிக் கொண்டிருக்க… “தட்டுல தட்சிணை போடுங்கோ”   “தட்டுல தட்சிணை போடுங்கோ” என்று கேட்டால் எப்படி இருக்கும். .                                             இந்தக் குரல் கேட்டு…. “ஏன்டி பங்கஐம் “குருக்கள் நல்ல வசதியாத்தானே இருக்கா h;. அவா ; ஒரே   பையன் அமொ p க்காவு+ல செட்டில்ட்இ கணிசமான பணம் மாசாமாசம் அனுப்பிடறான்.. அப்படி இருந்தும்… குருக்கள் அல்பமா “தட்டுல தட்சிணை போடுங்க” கேட்கறது நல்லாவா இருக்கு” என கேட்டாள் கல்யாணி.                                              அடி...