”ஏன்டா அனந்து, .இந்த வயசில
யோகா கத்துகிட்டா… ஒடம்புக்கு நல்லதுடா! வா ராசா வா! என்று கவிதைகள் நடையில் ரைமிங்கா
கூப்பிட்ட அப்பாவிற்கு பதிலாக..”போப்பா ஒனக்குத்தான் வேலை இல்லே, எனக்கு ஸ்கூல் ஹோம்ஒர்க் இருக்குப்பா” நான் ஸ்கூல் பேக் தூக்கி
போறதே யோகாதாம்பா” என்றான்.ennathuli அனந்துவின் யோகா -உலக யோகா தினத்தில் அனந்து யாரிடம் யோகா கற்றான்
அனந்துவின் யோகா -உலக யோகா தினத்தில் அனந்து யாரிடம் யோகா கற்றான் |
”இந்த வயசிலேயே
அப்பா சொல்றத கேக்குறதல..நீயெல்லாம் என்ன படிச்சு…என்று முனகிக் கொண்டே வெளியே சென்றார்.
அப்பா இருக்கும்
வரை யோகா பத்தி நினைவே இல்லாமல் படித்து பட்டம் பெற்று உயர்நிலை அதிகாரியாக சுழல்நாற்காலியில்
சுழன்று கொண்டிருக்கிறான். அவனுக்கு கீழ் ஐந்தாறு
பணியாளர்கள்.
அனந்து
சுழற்றும் வாய்வீச்சுக்கெல்லாம் ..சுழன்று சுழன்று யோகா செய்யாத குறையாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
அப்படி பென்ட் எடுத்து விடுகிறான் அனந்து.motivated
அப்படிப்பட்ட
அனந்து தன்னுடைய டேபிளில் இருந்த ஒரு பைல் கீழே விழுந்து விட அதை எடுக்க குனியும் போது….
திடிரென இடுப்பில் சுளுக்கு பிடித்து கொண்டது.
மறுபடியும்
கஷ்டப்பட்டு நிமிர்ந்து அன்றைய பொழுதை அசையாமல் கழித்து வீட்டுக்கு வந்தவுடன்..”டியர்
மஞ்சு இடுப்பு பிடிச்சுகிச்சு”ஏதாவது வைத்தியம் சொல்லேன்.
”ஏன் ஒங்கப்பாதான்
யோகா மாஸ்டர் அவர்கிட்ட இந்த யோகா கத்துக்கலையா, நான் என்ன ஒங்க அம்மா மாதிரி அந்த
காலத்து ஆளா.. நானும் மாடர்ன் கேள்தானே… உறீ.உறீ பல்லிளிச்சிகிட்டு வந்து லவ் பண்ணிதானே
கல்யாணம் கட்டினீங்க.
போங்க. மெடிக்கல்
ஷாப்ல மருந்து வாங்கி சாப்பிடுங்க என்றாள்.
”“ஸார் இடுப்பு
சுளுக்கு மருந்து” கேட்டுக் கொண்டிருக்கும் போதே… ”இன்னாப்பா அனந்து சௌக்கியமா சுளுக்கு மருந்து கேக்கற… நான் ஒங்க அப்பாவோட
சிஷ்யன்… வா ! மருந்து மாத்திரையெல்லாம் வேண்டாம் என்று மருந்து கடைக்கார ர் எதிரிலேயே
சொல்ல கடைக்கார்ர் முறைத்தார். shortstroies
அவர் வீட்டுக்கு கூப்பிட்டு போய்…” ஒரு பெட்ஷீட்டை
விரித்து…” நான் செய்ய மாதிரியே செய் என்று செய்து காண்பித்து…அவன் இடுப்பு சுளுக்குக்கு
இடையே…. செய்ய ..ஐயோ அம்மா ! என்று அலறும் போதே.. திடிரென்று.. சுளுக்கு பிடித்த பகுதிக்கு
நேர்எதிராய் கையால் தட்ட சுளுக்கு மாயமாய் மறைந்த து.
அப்போதுதான்
அப்பாவின் அருமையையும் யோகாவின் அருமையையும் புரிந்து கொண்டு …மறுநாள் அதிகாலையிலேயே
யோகா வகுப்பிற்கு சென்று கொண்டிருக்கிறான்
அனந்து.useful tips
”
No comments:
Post a Comment
தங்களது கருத்து எனது ஊக்கம்