7/20/2019

உறவுகள் வாழ்க்கையின் அஸ்திவாரம் என்பதை உணர்ந்தாளா ஆனந்தி


காலை ஒன்பது மணி….அவசர..அவசரமாய் ஆபிசுக்கு கிளம்ப          தயாராகிக் கொண்டிருக்கையில்அவள் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சரிந்து விழுந்ததில் அதிர்ச்சியில் உறைந்து, ஆட்டோவை வரச்சொல்லி குடும்ப டாக்டரிடம் மனைவியை அழைத்துப் போனான் கோவிந்தராஜ்.ennathuli
https://ennathuli.blogspot.com
உறவுகள் வாழ்க்கையின் அஸ்திவாரம் என்பதை உணர்ந்தாளா ஆனந்தி 


டாக்டர், ” நல்லாத்தான் இருந்தா,ஆனந்தி  என்னாச்சு தெரியல நெஞ்சைப் பிடிச்சுக்கிட்டு ஒக்காந்துட்டா என்னன்னு பாருங்கோஎன்றான்.
                      எல்லா பரிசோதனைகளையும் முடித்து பின், மருந்து மாத்திரைகள் கொடுத்து இத ஒரு வாரத்துக்கு சாப்பிடும்மாஅடுத்த வாரம் பார்க்கலாம் என்றார் டாக்டர்  
            மனைவியை வெளியில் இருக்கச் சொல்லி விட்டு டாக்டர்; பயப்படுறா மாதிரி எதுவும் இல்லையேன்னு கேட்கஅதெல்லாம் ஒண்ணும் இல்லை லைட்டான அட்டாக்தான் சரி பண்ணிடலாம் டோன்ட் ஒரி என்றார்.short stories
                                 மறு வாரம் ஆஸ்பித்திரி  போனதும்…… டாக்டா; கேட்டார்
என்னம்மா எப்படி இருக்கு ஒடம்பு
அப்படியேதான்  இருக்கு  நெஞ்சில சுருக்கென்று குத்தறமாதிரி  இருக்கு டாக்டர்என்றாள்.
                                  பயப்படாதே சரி  பண்ணிடலாம், மிஸ்டா; கோவிந்தராஐ; நீங்க கொஞ்ச நேரம் வெளிய இருங்க..கூப்பிடறேன்.
                                   என்னம்மா, எப்ப கல்யாணமாச்சு? ... கேட்க
               ஒரு வருமாச்சு டாக்டர்என்றாள்
                                    அது சரிதாம்பத்யம் எப்படி..?.ன்னு கேட்க…. போங்க... டாக்டர் முகத்தில் சிவப்பேறி திருப்பிக் கொண்டாள்.  டாக்டருக்கு.. புரிந்தது.
                                    உன்னோட அம்மா வீட்டுக்கு அடிக்கடி போவீயா?
                                  உறிம்..உறிம்  அவங்க மேல எனக்கு கோபம்….அதனால அவ்வளவா போறதில்ல
                   ஓன் மாமியார் வீட்டுக்கு…...முடிப்பதற்குள்….
                    எனக்கும்...அத்தைக்கும் ஏழாம் பொருத்தம்.  அவங்கள பார்த்தாலே…...உள்ளுக்குள்ள ஒரே நடுக்கம்... டாக்டர்  அவங்க வீட்டுக்கும் போறதில்லைmotivated
                                   கூடப் பிறந்த அண்ணன் இருக்கானா?, அவன் வீட்டுக்கு போவியா?
                                  டாக்டர் , என் அண்ணியைப் பார் த்தால் இன்னான்னே தெரியல கோப..கோபமா வருதுஅண்ணனும் அமாம்-சாமியாயிட்டான்…...எதுக்கு சண்டைன்னு...அங்கேயும் போறதில்லை
                                   அடுத்த கேள்வி கேட்பதற்குள் அவளாகவே முந்திக் கொண்டு, எனக்கு ஒரு அக்கா, தங்கச்சி ஒருத்தி இருக்காங்க…..அவங்க வீட்டுக்காரர்களும் சரியான முசுடுகள் அதனால அவங்க வீட்டுக்கும் போறதில்லை.  சொந்தக்காரர்கள் யாரையும் சோ;க்கறதுமில்லை நானும் போறதில்லை.. எதுக்கு டாக்டர் . வம்புச்சண்டை... அவர்தான் எல்லார் வீட்டுக்கும் போயிட்டு நல்ல பேர்  வாங்கிட்டு வந்திடுறார்... அது போதுமேஎன முடித்தாள்.useful tips
                                                 ரிம்மா இந்த மருந்து மாத்திரை சாப்பிடு நல்லா ஆயிடும்அடுத்த வாரம் பார்க்கலாம். நீ போய் ஒன் வீட்டுக்காரை வரச்சொல்லு அவருக்கு அட்வைஸ் பண்ணணும் என்றார் டாக்டர்
                                 மிஸ்டர்  கோவிந்தராஜ் , ஒன் பொண்டாட்டி வெளிய எங்கும் போகாம வீட்லேயே இருக்காங்க போலிருக்கே என்று கேட்க, அமாம் டாக்டர்என்றான்.
                                 இந்த வாரத்தில இருந்து, ஒவ்வொரு சனிக்கிழமை தோறும், சொந்தக்காரர்களை போன் பண்ணி அவங்களாவே உங்களை அவங்க வீட்டுக்கு கூப்பிட சொல்லி ஞாயிற்று கிழமைகளில் நீயும் ஒன் பொண்டாட்டியும் போயிட்டு….. அடுத்த மாசம் வாங்க பார்க்கலாம்... எப்படி இருக்குன்னு சொல்றேன்..
                                  டாக்டர்  ஒங்களை டிரிட்மெண்ட் பண்ண சொன்னா, பொண்டாட்டி கூட வீடு வீடா சுத்திக்கிட்டு வா என்கிறீங்கன்னுரிமையோடு கேட்டான்
                                  நான் சொன்னதை செய்துட்டு வாங்க அப்புறமா விவரம் சொல்றேன்...முடித்துக் கொண்டார்
                                 மறு மாசம், கோவிந்தராஜ் , தன் மனைவியை டாக்டரிடம் கூப்பிட்டு போனான்.poems
                                என்னம்மா, எப்படி இருக்கே ஒடம்பு நல்லா இருக்காகேட்க
                                  நான் நல்லாத்தான் இருக்கேன் டாக்டர்  இப்ப நெஞ்சில சுருக்குன்னு குத்தற மாதிரி எதுவுமில்லை…...இவர் தான் என்னை கம்பள் பண்ணி ஒங்ககிட்ட கூட்டி வந்திருக்காரு  என்றவுடன்               மருந்து மாத்திரைகள் ஏதாச்சும் வேணுமா-ன்னு கேட்க
              டாக்டர்,  எனக்கு ஏதாவது ஒண்ணுன்னா, அம்மா, மாமியார்   அண்ணன் குடும்பம் இப்படி எல்லாரும் வந்திடுவாங்க…. அப்புறம் எதுக்கு மருந்து மாத்திரைலாம்…. என்றாள்.
 அந்த பதில் கேட்டு….. .ரி..ரி.   நான் எப்ப ஒங்க வீட்டுக்கு வரலாம்-னு டாக்டர் கேட்கநீங்க எதுக்கு வரணும்-ன்னு கேள்வி கேட்டாள்.
     அந்த கேள்வியில் திகைத்தபோதே.. நான்தான் முதல்ல ஒங்க வீட்டுக்கு வருவேன் அப்புறமா நீங்க எப்ப வேணாலும் வரலாம் என்றாள்
                                                ஆல்-இஸ் வெல்என வாழ்த்தி வழியனுப்பினார்                                                                                                                                                                  
                                                                                                                                                               



No comments:

Post a Comment

தங்களது கருத்து எனது ஊக்கம்

ஜோக்கீரர் – நகைச்சுவை கதை

                     ஜோக்கீரர் – நகைச்சுவை கதை               ” ஆயிராமாச்சே .. ஆயிரமாச்சே ! ” சோக்கா ! சோக்கா ! எனக்கே கிடைக்கணும் .. என...