சரஸ்வதி பூஜை உண்மையில் சரஸ்வதிக்கா?
சரஸ்வதி பூஜை உண்மையில் சரஸ்வதிக்கா?
என்னைக் கண்டுக்க மாட்டேங்கறாங்க, ஆனா ஒனக்கு சின்ன பொட்டிக்கடைக்காரங்கல இருந்து மிகப்பெரிய தொழில் அதிபர்கள் வரை எல்லோரும் தலைல தூக்கி வைச்சு கொண்டாடுறாங்கோ, நல்ல யோகம்தான் ஒனக்கு” என்றார் பிரம்மா, சரஸ்வதி தேவியிடம்.
சரஸ்வதி பூஜை உண்மையில் சரஸ்வதிக்கா?
இதைக் கேட்டதும், சரஸ்வதி தேவியின் முகம் நாணத்தால் சிவந்தது. ”போங்க வருடத்தில ஒருதடவைதான் என்னைக் கொண்டாடுறாங்கோ, அதுகூட ஒங்களுக்கு பொறுக்கலையா” மடக்கினாள் சரஸ்வதி தேவி.
எனக்கு அதுகூட கிடையாதே!
”அதெல்லாம் ஒங்க தலையெழுத்து, ” என்றாள் சரஸ்வதிதேவி.
தலையெழுத்தை நிர்ணயிக்கும் பிரம்மாவுக்கே தலையெழுத்து சரியில்லையே என்றாள் சரஸ்வதி தேவி.
போகட்டும்… போகட்டும்… சரி.. ”ஒன்னை மக்கள் எப்படியெல்லாம் கொண்டாடுகிறார்கள் பார் என்றார் பிரம்மா.
”நான் இன்னா பாக்குறது, நீங்களே அதைப்பார்த்து ஒங்க வாயால சொன்னா காதுகுளிர கேட்பேனே” என்றாள் சரஸ்வதி தேவி.
முதல்ல பொட்டிக்கடையைப் பார்ப்போம். ”பொட்டிக்கடை காலைல திறந்தா, இராத்திரி பதினோரு மணி வரை இருக்கும். ஓய்வே இருக்காது. ஆனா வருடத்தில ஒருநாள் வியாபாரத்தைப் பற்றி கவலைப்படாம சுத்தம் செய்து படையல் போட்டு பொரிகடலை படைச்சு எல்லாருக்கும் கொடுத்து மகிழ்ச்சியாய் கொண்டாடுறான்
அடுத்ததாக… ஆரம்பிக்கும்போது… ”நாராயணா… நாராயணா” குரல் ஒலிக்க ”ஐயோ கலகக்காரன் வந்துட்டான்யா, ஆளைவிடு, அவனையே கேட்டுக்கோ… நல்லாவே சொல்வான் என்றார் பிரம்மா.
நாரதரைப் போய் கலகக்காரன் சொல்றீங்க, அவா்தான் ”பிரிலேன்ஸ் ரிப்போர்ட்டா் ஆச்சே, ஒங்களைவிட சரியா சொல்வாரு, அவா்கிட்டேயே கேட்டுக்கறேன். இது சரஸ்வதிதேவி. நல்லா கேட்டுக்கோ, என நழுவிவிட்டார் பிரம்மா.
நாரதா ”என்னை எப்படி கொண்டாடுறாங்கன்னு பிரம்மா, இவ்வளவு நேரம் எனக்கு சொல்லிட்டிருந்தாரு, நீ வந்தவுடனேயே அவா் தப்பி ஓடிவிட்டாரு, மீதியை நீதான் சொல்லணும்” என்றாள் சரஸ்வதி தேவி.
நாராயணா, நாராயணா, ”தேவி, நான் திரிலோகசஞ்சாரின்னு ஒங்களுக்கு தெரியும். எதையும் மறைக்கவோ, மறுக்கவோ தெரியாது. ஆதனால உள்ளதை உள்ளபடியே சொல்வேன். என்னைக் கலகக்காரன்-ன்ற முத்திரையை வழக்கம்போல குத்தக்கூடாது, சம்மதா கேட்டார் நாரதா்.
சரி, நாரதா சொல்லும் என்றார் சரஸ்வதி தேவி.
. ஒரு மெக்கானிக் கடையில் ”எல்லாப் பொருட்களையும் வெளியேப் போட்டு, ஸ்கூட்டா், பைக் எல்லாம் நல்லா துடைச்சு, பளிச்சுணு வைச்சு அதுக்கெல்லாம் குங்கும பொட்டு வைச்சு, எல்லாருக்கும் பொரிக்கடலையும் தர்றாங்க, இது எல்லாக் கடையிலேயும் நடக்கும்.
பிறகு ஆட்டோக்காரா்கள் சரஸ்வதியை எப்படிக் கொண்டாடுறாங்க தெரியுமா? ஒரு மாதத்திற்கு பிறகும் அவங்க கொண்டாட்டம் நடக்கும்மா” என்றார் நாரதா்
ஒங்களைக் கொண்டாடுறதல
அப்படி ஒரு மகிழ்ச்சி, ஒங்களுக்கு பெருமைதானே என்றார்.
தேவி, ஒங்கள
கொண்டாடுற
கொண்டாட்டத்தில
ஒரு உள்நோக்கம் இருக்கும், பொட்டிக்கடை முதல் பெரிய தொழில் அதிபா்களை அதைத்தான் செய்யறாங்கா, அதைச் சொன்ன ஒங்களுக்கு வருத்தமா இருக்கும், சொல்லட்டா, வேண்டாமா? என்றார் நாரதா். சரஸ்வதி தேவியின் முகம் கலவரமானது.
என்ன நாரதா, ஏதோ, ஏதோ சொல்றே, என்னைக் கொண்டாடுறதுல சுட்சுமா? இதுக்கு பதில் சொல்லியே ஆகணும்” விடாப்பிடியாக நின்றாள் சரஸ்வதி தேவி
இவ்வளுவு நேரம் தேவி என்ற நாரதா், இப்போது ”தாயே” என்றார்.
தாயே இருக்கட்டும் விளக்கம் சொல்லும், அதிகாரத்தைப் பயன்படுத்தினார்
தாயே, கொண்டாட்ட துவக்கம் ஒங்ககிட்டதான், ஆனா, அவங்க விரும்புறத திருமகளைத்தான், அதாவது பணத்தைக் குறிவைத்துதான், இதுதான் உலக மக்களோட இயல்பு தாயே” என்றார் நாரதா்.
நாரதா, நீ ஒன் வேலையைக் காட்டிவிட்டாயா, முதலில் இடத்தைக் காலி பண்ணு ” என்றாள் சரஸ்வதி தேவி.
கலைமகளிடம் தோற்றுப்போனதால், ”திருமகளை நோக்கி படையெடுத்தார், வழக்கமான கலகத்தை செய்யவே”
No comments:
Post a Comment
தங்களது கருத்து எனது ஊக்கம்