பொங்கல் பண்டிகையும்..நினைவாற்றல்
முத்தண்ணாவும்
“டேய், இராகவா போன வருஷம் இருபதாம் தேதி காலைல ஆறு
முப்பத்திரண்டு மணிக்கு ஆறாயிரம் கடன் வாங்கிட்டு போனியே! எப்படா திருப்பி தரப்போறே” என்ற அரவிந்தனின் அலைபேசியில் குரல் ஒலித்த
துதம் அவன் நிலை என்னவென்று அவனுக்குதான் தெரியும்.ennathuli
பொங்கல் பண்டிகையும்..நினைவாற்றல் முத்தண்ணாவும் |
”ஏன்ம்மா, பத்து வருஷத்துக்கு முன்னால, ஒன்கிட்ட ஒத்தவட செயின் வாங்கி கொடுத்தேனே, வைச்சிருக்கியா? இல்லே ஒன் பொண்ணுக்கு குடுத்திட்டியா”
இப்படிக் கேட்பவனை ”வீட்டுல பிறந்து பொண்ணுக்கு மரியாதை இருக்கா
பாரு” புலம்பும் அரவிந்தனின் அம்மா பார்வதி.
“ஏன்டி, இராஜம், நம்ம பையன் எல்.கே.ஜில படிக்கும்போது, ஒரு மிஸ், அவன் கன்னத்துல கிள்ளி செவந்து போச்சே, அந்த மிஸ் பேரு செவ்வந்திதானே” short stories
இப்படி, ”நினைவாற்றலில் பதின்மர் கவனகரையே மிஞ்சும்
அரவிந்தன்…. இப்போது. ”ஏன்டி இராஜம், இங்ஙனதானே என் மூக்கு கண்ணாடி வைச்சேன், நீ பார்த்தியா? கேட்டார்.
”ஏங்க
இப்படி பன்றீங்க,
”ஒங்க மூக்கைக் கண்ணாடில
பாருங்க, கண்ணாடி இருக்கும்.. கண்ணாடிப் போட்ட ஒங்களுக்கு கண்ணு தெரியலையா?
கொஞ்ச
நாளாய் அவருக்கு மறதி நோய் வந்து விட்டது. ஆதலால்.. காபி குடித்து விட்டு ”காபி குடிக்கவில்லை” என்று அழிச்சாட்டியமாய் காலையிலே கலவர சண்டை. இரவு வரை ஏதாவது பிரச்சினை.
இவ்வளவு பிரச்சினைகள் இருக்க, அவருக்கு கூடுதலாய் வெளியிலிருந்து பிரச்சினை
தோன்றியது. ஆதாவது, எல்லாம் டிஜிட்டல்மயம், டெபிட் கார்டு, ஸ்மார்ட் கார்டு, பாஸ்வேர்டு, இன்னும் ஆதார் கார்டு… எல்லாவாற்றுக்கும் ஏதாவது ஒரு பாஸ்வேர்டு
ஞாபகம் வைத்து கொள்வதற்குள் மண்டை
வெடித்து விடும்போலிருக்கிறது.
பொங்கல் திருநாள்
”ஏங்க என் அம்மா ஊர்ல இருந்து வர்றாங்க, ஆதனால, அவங்களை நல்லா கவனிக்கனும், மஞ்சள் வாங்கணும்
கரும்பு வாங்கணும், பொங்கல் வைக்க பானை வாங்கணும், வெல்லம் வாங்கணும்.இப்படி அடுக்கி
கொண்டே போய் … , என்கிட்ட
பணமில்லை, ஏ.டி.எம்மில இருந்து எடுத்துட்டு வாங்க” என்றாள்.ennathuli
பொங்கலைக் கொண்டாட பணம் எடுக்க ஏ.டி.எம்.மில் போய் ”டெபிட் கார்டை” சொருகிய பின் ”பின் நெம்பர்” அவருக்கு ஞாபகம் வராமல் பணம் எடுக்க முடியாமல்
போய் விட்டது.
வீட்டுக்கு
வந்து, மனைவியிடம் , ”ஏ.டி.எம். பின் நெம்பர் மறந்து போச்சு அதனால பணமெடுக்க
முடியல, ஏதோ ஒரு டைரில குறிச்சு வைச்சிருந்தேன், அது எந்த டைரின்னும் மறந்து போச்சு தேடிக்
கொடேன்” என்றார்.
”ஏங்க, ஒங்க அம்மா வந்தா மட்டும், ”பணம் தானா பாக்கெட்டுல வந்துடுது, என் அம்மா வந்தா மட்டும் பணம் வரலை, பின்
நெம்பர் மறந்து
போச்சுன்னு சொல்றீயா”
என்று மல்லுக்கு நின்றதோடு… நம்ம பையன் கன்னத்தை கிள்ளுன மிஸ் பேரெல்லாம்
ஞாபகம் வருது, பின் நெம்பர் ஞாபகம் வரலையான்னு
என்றோ அவனின் நினைவாற்றலை புகழ்ந்து கொண்டதற்கு இன்று சவுக்கடி கொடுத்தாள்.useful articles
“சரி…சரி சண்டைப் போடாதே பக்கத்து வீட்டுல கேட்டுப்பார்க்கறேன்.
பக்கத்து
வீட்டு பரசுராமனிடம்
”ஸார், என் மாமியார் வந்திருக்காங்க, ஏ.டி.எம். பின் நெம்பர் மறந்து போச்சு, அதனால இப்போதைக்கு ஒரு ஆயிரம் ரூபாய் கடனா
கொடுங்க திருப்பிக் கொடுத்திடறேன் என்றார்.
பரசுராமனோ.. “ஏம்பா ஒனக்கோ ஞாபக மறதி, நான் ஆயிரம் கொடுத்து, நீ எப்ப கொடுத்தேன்ன்னு கேள்வி கேட்டால்”என்று முன்னெச்சரிக்கை முத்தண்ணவாய் ”நீ உன் மனைவியை வரச்சொல்லி வாங்கி கொள் என்றார்.ennathuli
ஆயிரம்
ரூபாய் வாங்கிய அரவிந்தன் கடைக்கு போய் பொங்கலுக்கு வேண்டிய அனைத்தும் வாங்கி வந்து பொங்கலைக் கொண்டாடி
ஒருவழியாய் சமாளித்தான் முன்னெச்சரிக்கை முத்தண்ணா
No comments:
Post a Comment
தங்களது கருத்து எனது ஊக்கம்