1/23/2020

படைப்பை தடுக்கலாமா


  படைப்பை தடுக்கலாமா

                   எல்லோரும் இப்பொழுது, புத்தகம் படிப்பது என்பது அரிதாகி விட்டது. பள்ளி, கல்லூரி புத்தகங்களைத் தவிர இதர புத்தகங்களை படிப்பது கிடையாது என்று இலக்கியவாதிகளும். எழுத்தாளா்களும் வருத்தப்படுகிறார்கள். ennathuli
https://ennathuli.blogspot.com
படைப்பை தடுக்கலாமா ennathuli


                             இவர்கள் வருத்தப்படுகிறார்களே என்று எண்ணி, நீங்கள் நூலகத்திற்கு செல்கிறீர்கள். ஒரு புதிய புத்தகம், தலைப்போ... படி...படி..என அழைக்கிறது. ஆவலோடு புத்தகத்தைப் புரட்டுகிறீர்கள். பொருளடக்கமும் உங்களைப் பன்னீர் தெளித்து வரவேற்கிறது.
                             புத்தகத்தில் லயித்துவிடுகிறீர்கள். ஆழமான கருத்துக்கள். அக்கருத்துக்களை குறிப்பெடுக்க முடிவு செய்து, எழுதுகோலை திறப்பீா்கள். அதிர்ச்சி காத்திருக்கிறது.... அப்புத்தகத்தின் இரண்டாம் பக்கத்திலோ... மூன்றாம் பக்கத்திலோ ... இப்புத்தகத்தின் எந்தவொரு பகுதியையும், எழுத்தாளரின், பதிப்பகத்தாரின் முன்அனுமதியின்றி மறுபிரசுரம் செய்வதோ, வேறு எந்தவகையிலும் எடுத்து கையாள்வதோ தடைப்படுத்தப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கும்.
                             அவ்வளுவுதான், சோர்ந்து போய்விடுவீர்கள். அந்த புத்கத்தில் உள்ள ஓர் அழமான கருத்து, உங்களை... கதையாகவோ, கட்டுரையாகவோ அல்லது கவிதையாக வடித்தெடுக்க தூண்டில் விடும். ஆனால் முடியாதே. அபாய அறிவிப்பு ஆயிற்றே அது.short stories
                             அந்த நூலின் எழுத்தாளரது, பதிப்பகத்தாரின் பதிப்புரிமை பாதுகாப்பானதுதான. அதில் மாற்றுக்கருத்து கிடையாது. ஆனால், ஓர் ஆழமான கருத்தைக்கூட எடுத்து ஆள்வதில் உள்ள சிக்கல், அந்த புத்தகத்தைப் புறக்கணிக்கவே வாசகர்களுக்கு தோன்றும்.
                             அபாய அறிவிப்பு படித்தபின்பும், புத்தகத்தைப் புரட்டுகிறீர்கள். கடைசியில் உள்ள சில பக்கங்களில், அந்த எழுத்தாளர், இந்த புத்தகம் உருவாவதற்கு தேவையான குறிப்புகள், மற்றும் ஓப்புகை ஆகியவை நான்கு பக்கங்களில் நாற்பது இருக்கும். கூடவே விவரங்களுக்கு துணைப்புரிந்த இணையங்களும், குறிப்பிடப்பட்டிருக்கும்.book review
                             புத்தக ஆசிரியா் , மகாபாரதம், சங்க இலக்கிய நூல்கள், வரலாற்று ஆவணங்கள், வெளிநாட்டு எழுத்தாளர்களின் நூல்கள் ஆகியவற்றை   ஆய்ந்து, அதன் சாரங்களை இவர் புத்தகத்தில் வடிப்பாராம். ஆனால், இவர் புத்தகத்தில் உள்ளதை அடுத்தவர் தொடக்கூடாதாம். என்னே இலக்கியதர்மம் இது.
                             புத்தக ஆசிரியின் அபாய அச்சுறுத்தல், ஒரு படைப்பாளியை அல்லவா இலக்கிய உலகம் இழுந்துவிட காரணமாக அமைகின்றது.                    
                             பண்டைய தமிழ் இலக்கிய நூலான தொல்காப்பியத்தின் ஒரு சில கருத்துக்கள், திருவள்ளுவரின் திருக்குறளில் இடம்பெறும். அதே போல, நாட்டுப்புற பாடல்களில் உள்ள கவிநயம், கவிச்சக்கரவர்த்தி கம்பனின் காவியத்திலே கூட இடம்பெறும். . மூங்கில்இலை மேலே தூங்கும் பனிநீரேஎன்று பாடிவிட்டு ...அடுத்த அடிக்கு திணறுவார் கம்பர்..... அப்போது, சாதாரண பாமரன்.... தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனேஎன்று இயல்பாக முடித்துக் கொடுத்ததாக வரலாறு உண்டு. இதே போல்தான், ஒன்றில் இருந்துதான், மற்றவைப் பிறக்கின்றது என்ற அடிப்படை மறந்துபோய் விட்டதா? என்பதே கேள்வி.astrology
         
                                    
திருக்குறளைப் போலவே, நாலடியார் இருக்கும், ஔவையின் ஆத்தச்சுடீயின் கருத்துக்கள் ஒவ்வொருவரும், அவர்தம் பாணிகளில் எடுத்துரைப்பார்கள்.
                   திருவள்ளுவரும், கம்பரும் இன்னபிற புலவர்களும் இதுபோன்று ஆபாய அறிவிப்பு குறிப்பாக வெளியிட்டிருந்தால், இலக்கியம் இன்றுவரை வாழந்திருக்குமா? ennathuli
                   இன்றுவரை கண்ணதாசனை மறக்கமுடியாமல், அவர்தம் பாடல்வரிகளில் லயித்து இன்பம் காண்கிறோமே எதனால்?. சங்க இலக்கியங்களில் புரியாத வகையில் கடுமையான வார்த்தைகளில் உள்ளதை, பாமரனும் புரிந்துக்கொள்ளும் வகையில், அவர் மறுவடிவமாக தந்ததில் அவருக்கு இணை அவரேதான். கேட்டதும் கொடுப்பவன் கண்ணன் மட்டுமல்ல.... கண்ணதாசன்கூடத்தான் பாடல்களை கேட்டதும் கொடுத்தான். கவிஞர் கண்ணதாசனுக்கு தடைப்போட்டிருந்தால்.... காலத்தால் அழிக்கமுடியா கவிதைகள் அல்லவா காணாமற் போய் இருக்கும்.
                   நாட்டுப்புற பாடல்களில் உள்ள அருமையான வரிகள்... திரைப்படத்தில் பல்லவிகளாக மாறி பட்டித்தொட்டி எங்கும்..... ஒலிபரப்பாகி அமர்க்களப்படும்..... ஒடுகிற தண்ணியில  ஒரசி விட்ட சந்தனத்தைஎன்பது நாட்டுப்புற பாடலின் வரி. அது காதுக்கினிய பாடலாகி அமைந்ததில் கவியரசர் வைரமுத்துவுக்கு, வைரத்துக்கு... முத்தாக அமைந்தது அல்லவா?  நாட்டுப்புற பாடல்களுக்கு யாராவது சொந்தம் கொண்டாடி... கவிஞருக்கு தடைப்போட்டார்களா? என்ன? Useful tips
                   பெரிய எழுத்தாளர்கள், பதிப்புரிமை என்று மட்டும் போட்டு தங்களின் படைப்பாற்றலக் காப்புரிமையாக்குகிறார்கள். ஆனால், ஆயிரத்தெட்டு நூல்களையும், ஆவணங்களையும் எடுத்து அய்ந்து படைத்தவர்கள்தான்இதுபோன்று அபாய அறிவிப்புகளை வெளியிடுகிறரர்கள். இவர்கள் வரையிலும், வளர்ந்தால் சரிஎன்ற சுயநல நோக்கம்தானே!
                     ஒரு படைப்பு, இன்னொரு படைப்புக்கு ஆதாரமாக இருந்தால், அதுதான் அந்த படைப்பின் பிறவிப் பயனாகும்.  எனவே, படைப்புத் தடைக்கான  அபாய அறிவிப்பாக கால்கோள்நிறுவாதீர்கள் என்பதுதான் இக்கட்டுரையின் நோக்கமே தவிர.... எவரையும் புண்படுத்துவது நோக்கமல்ல.        ennathuli

                    நீங்கள் அறிவித்த அபாய அறிவிப்பே, ஒரு படைப்பாகவும் உருவாக காரணமாக அமைந்து விட்டது அல்லவா? ……ஹி..ஹி.ஹி…..   motivated stories                                                                  




No comments:

Post a Comment

தங்களது கருத்து எனது ஊக்கம்

ஜோக்கீரர் – நகைச்சுவை கதை

                     ஜோக்கீரர் – நகைச்சுவை கதை               ” ஆயிராமாச்சே .. ஆயிரமாச்சே ! ” சோக்கா ! சோக்கா ! எனக்கே கிடைக்கணும் .. என...