1/20/2020

கோயில் கட்ட நன்கொடை தராத பெரிய மனிதர் செய்த வேலை என்ன



நம்ம ஊர்லேயே பெரிய்ய...வீடா இருக்கே அந்த வீட்ல இருக்கிற அவரா அப்படி சொன்னார். பார்த்தா ஞானப்பழமா தெரியறார்நெற்றியில பட்டை..பட்டையாய் விபூதி, குங்குமம் அணிந்து எப்பவும் சிவ நாமம் சொல்லிக்கிட்டிருக்கிறாரே சிவராமன். தொழில் அதிபர்ன்னு வேற சொல்றாங்க அவரா நம்பவே முடியவில்லை என்றான்  இராஐன். 
 கோயில் கட்ட நன்கொடை தராத பெரிய மனிதர் செய்த வேலை  என்ன
https://ennathuli.blogspot.com
கோயில் கட்ட நன்கொடை தராத பெரிய மனிதர் செய்த வேலை  என்ன



                ஆமாம்ப்பா நீ ஊருக்கு பதுசு ஒனக்கு தெரியாது..  வெளியூர் கோயில்களுக்கெல்லாம் கூட நன்கொடை குடுக்குறாறு...ஆனா நம்ம ஊர்ல உள்ள ஒரு கோயிலுக்குக்கூட தம்பிடி தரமாட்டேங்கறாருஎல்லாம் வெளிவேஷம்என ஒரு ஒருவர்  சொல்லஆமாம்...ஆமாம்என தாளமடித்தனர்  சுற்றி இருந்த கூட்டத்தார் ennathuli
                இத்துணைப் பேச்சுக்களும் அவர் காதில் விழாமலா போகும். அதைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. . ஒரு சிலர்  ஐயா, நீங்க இந்த ஊர்லேதானே இருக்கீங்கே ஆபத்து சமயத்துல நாங்கதானே ஒதவணும்என மறைமுகமாக மிரட்டியும் அசரவில்லை. Short stories
                திருவிழாக் காலம் வர…..ஊர்  பொpயவர்கள் கூட்டம் போட்டனர்  அதில் சிவராமனை கூப்பிடவில்லை. அவர்தான் பணம் தருவதில்லையே அதனால் வழக்கமா கூப்பிடுவதை தவிர்த்தனர்  ஏல்லாரும் நன்கொடை வசூல் பண்ணணும். அது இல்லாம இந்த முறை சிவராமன்கிட்ட இருந்து யாராச்சும் ஒரு ரூபாய்  நன்கொடையா வாங்கினா கூட போதும் அவர் அடுத்து வருகிற உள்ளாட்சி தேர்தல்ல   தலைவரா போட்டியிட ஆதரவு தருகிறோம் என சொல்ல அதற்கும் ஆமாம்...ஆமாம் என தீர்மானம் போட்டனர்
                மறு நாள் காலை ஏழு மணியளவில்  ஊரைச் சுற்றிப் பார்த்தான் இராஐன்ஊரை சுற்றி வர...வரஅப்பொழுதுதான் அவனுக்கு புரிந்தது அந்த விஷயம் ……motivated stories
                மறுதடவை கோவில் கூட்டத்தில் ஐயா, நான் சிவராமன் ஸார்கிட்டே இருந்து நன்கொடை வாங்கி தாரேன்.. அது என் பொறுப்பு அதுக்கப்புறம் நான் சொல்றத நீங்க கேக்கணும் சரியா என கேட்டான்.
                என்னது வருஷக்கணக்கா நாங்க இருக்கோம் எங்களை மதிக்காத அவரு புதுசா வந்த ஒனக்கு தந்துடுவாரோ நன்கொடை கிண்டலாக கேட்டனா; ஒரு சிலர்  விடுப்பா... நமக்கு காரியம் ஆகணும் யார் செய்தா நமக்கு என்ன... என ஒப்புக் கொண்டனர்
                இராஐன் அச்சகத்திற்கு சென்று ஒரு நோட்டிஸ் அச்சடிக்க சொனான் அதில்  ஊர்நலனுக்காக புதுசாய் பொதுவேலை ஒன்று செய்ய உள்ளதாகவும் அதற்கு பொருளுதவியோ      நிதியுதவியோ வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்வதாகவும் இப்படிக்கு ஊர் பொதுமக்கள் என இருந்தது. Useful tips
                 அந்த நோட்டிஸைப் பார்த்த ஊர் பெரியவர்கள், கோவில்களுக்கு தராதவா; இதுக்கா கொடுக்கப் போறாரு  நாமதான் அசிங்கப்படணும் என முணுமுணுத்தனர்.
                இந்த தடவ நிச்சயமா நன்கொடை தருவாரு. ஆனா அதை கோவில்      திருவிழாவுக்கு செலவு பண்ணக்கூடாது நான் சொல்ற வேலைக்குத்தான் செலவு செய்யணும்சரியா, கேட்டு…. இல்லேன்னா நான் இந்த ஊர்ல இருந்து காலி பண்ணிட்டு போயிடுறேன் சவால் விட்டான்அதைக் கேட்ட ஊர்ப்பெரியவர்கள் அமைதியாகி விட்டனர்astrology
                     மறுநாள் காலை சிவராமன் வீட்டிற்கு முன் கூடினர் பெரியவர்கள். அதில் இராஐனும் இருந்தான்.
                      என்னப்பா இவ்வளுவு பேரு கூட்டமா வந்திருக்கீங்க….அதான் நம்ம ஊர் கோயில்களுக்கெல்லாம் நன்கொடை தரமாட்டேன்னு ஊரு முழுக்க பேச்சா இருக்கே இருந்துட்டு போகட்டும்ன்னுசொன்னார்
                அது இல்லீங்க இது வேற விஷயம் என நோட்டீஸை அவரிடம் கொடுத்தான் இராஐன். அதைப் படித்து பார்த்த அவர்…. ஏல்லாரும் கொஞ்ச நேரம் ஒக்காருங்கோ என கூறி விட்டு உள்ளே போனார்.
                   வெளியே வராத அவர்  மனைவி அனைவருக்கும் காபி எடுத்து வந்தார் . ஒருவர் முகத்தை ஒருவர் ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டனர் காபி குடித்துக் கொண்டிருக்கையில்...
                இந்தாப்பா தம்பி இராஐன்,  ஒரு காசோலை தந்தார். அதில் ஐந்து இலட்சம் என இருந்தது. அதைப் பார்த்த இராஐன்.
                ஐயா, ஊர்  கோயில்களுக்கு தம்பிடி தராத நீங்களா இவ்வளவு பெரி ய தொகை குடுக்கிறீங்க புரியலேயேஎன்று கேட்க
                   தம்பி இந்த ஊர்ல தெருக்கு தெரு  கோயில் இருக்கு…. ஆனா அதை சரியா பராமரிக்காம அதைச்சுற்றி உள்ள காலி இடங்களையே கழிப்பறையா பயன்படுத்துறதுல என்னப்பா பக்தி இருக்கு... கோயில் கட்டுறத விட கழிப்பறைகள் இருந்தா ஊர்  சுகாதாரமா இருக்கும்...ஊர் சுகாதாரமா இருந்தா நம்ம ஊரே கோவில்தானேப்பாஎன்றார்
                  அதைக் கேட்ட ஊர்ப் பெரியவர்கள் இராஐனை நன்றி புன்னகையோடு பார்த்தனர்.                                   
நன்றி- சுற்றுச்சூழல் புதிய கல்வி                             

No comments:

Post a Comment

தங்களது கருத்து எனது ஊக்கம்

ஜோக்கீரர் – நகைச்சுவை கதை

                     ஜோக்கீரர் – நகைச்சுவை கதை               ” ஆயிராமாச்சே .. ஆயிரமாச்சே ! ” சோக்கா ! சோக்கா ! எனக்கே கிடைக்கணும் .. என...