2/14/2020

கூவி தொலைத்த கொண்டைச் சேவல்- காதலர் தினம் ஸ்பெஷல்


கூவி தொலைத்த கொண்டைச் சேவல்- காதலர் தின ஸ்பெஷல்

                                                  

               கதிரவன் தன்னொளியைப் பரப்பி விட்டு சற்றே ஓய்வெடுக்க,
          மலைமகளின் மடியினில் துயிலப் போகின்றது. அந்த வேளையில் முல்லை            மலர்கள் பூத்து  நறுமனத்தை காற்றில் பரப்பி விடுகின்றன. அந்த காற்று
          தவழ்ந்து எங்கும் பரவி ஒருவித பரவசத்தை ஏற்படுத்துகிறது. அதே              வேளையில்   நிலா மங்கை வானவீதியில் உலா போகின்றாள். ennathuli

https://ennathuli.blogspot.com

கூவி தொலைத்த கொண்டைச் சேவல்- காதலர் தின ஸ்பெஷல்
                                               



              அப்பொழுதுதான் தலைவன் வெகுநாட்களாக பார்க்காத  தலைவியை ஆவலுடன் அவள் இருப்பிடம் தேடி வருகின்றான். அவன் வருவதைப் பார்த்தவுடன் தலைவியின் தோழி அவர்களின் நெருக்கத்திற்கு இடையூறாக இருக்க கூடாதென்று நாகரிகமாக ஒதுங்கி கொள்கிறாள்.

              வெகுநாட்கள் கழித்து வந்ததால் வார்த்தைகள் வெளிவரவில்லை.
              அவளுடல் மெலிந்து இருக்கிறது. கைவளையல்கள் கழன்று விடும் நிலைக்கு வந்து விட்டதைப் பார்த்தான் தலைவன்  உடல் பசலைப் பூத்து விட்டது. Short stories              ”ஏன் இப்படி மெலிந்து விட்டாய் அன்பே! என்றான்.              ”எல்லாம் தங்களைக் காண முடியாத ஏக்கம்தான்” என்றாள்.               ஆண்களுக்கு அழகு தொழில் செய்வதுதானே. அதைச்  செய்யத்தானே அயலுர் சென்றேன்” என்றான்.              ”என்னை விட உங்களுக்கு தொழில்தான் முக்கியமா?” சிணுங்கினாள்.              ”நீயும் முக்கியம், அதே வேளையில் தொழிலும் முக்கியமல்லவா? நாளை நமக்கு திருமணம் நடந்தால் இல்லறம் நடத்துவற்கு செல்வம் வேண்டாமா? அதைத்தான் முன்னோர்கள் திரைக்கடலோடியும் திரவியம் தேடு” என்றார்கள் என்றான்.motivated stories              ”போதும் உங்கள் தொழில் பக்தி” என்று மீண்டும் சிணுங்கினாள்.               அவளை ஆதரவாக அணைத்தப்படி அவள் விழிகளை தலைவன் தன் விழிகளால் ஈர்த்தான்.  விழிகள் நான்கும் ஒன்றோடு ஒன்றாக கௌவிக் கொண்டன.    தலைவியின் செம்பவள இதழ்கள், தலைவனின் இதழ்களோடு சேர துடிக்கின்றன. ஆனால், நாணம் தடுக்கின்றது. Useful articles
              நங்கை  நாணுகிறாள், அவள் கன்னங்கள் செம்மைப் படருகிறது. துவள்கிறாள் அவளின் நிலைப் பார்த்து, அவனின் தோளினில் சாய்த்துக் கொள்கிறான் தலைவன்.
              தலைவனின் கரங்கள், தலைவியின் கரங்களோடு இணைகின்றன. இதழ்கள்  செம்பவள இதழ்களோடு, மலரில் தேனெடுப்பது போல படர்கின்றன. Literature articles
              தலைவியின் செம்பவள இதழ்களின் சிவப்பு, அவளின் கண்களில் செவ்வரிகளாக படர்கின்றன. இதழ்களில் வெளுப்பேறுகின்றன.
              தலைவியின் மயக்கத்தில் நாணம்  காணாமல் போய்விட, அதுதான் நல்லதொரு சந்தர்ப்பமென்று, தலைவனும், காதல் மயக்கத்தினை கரைசேர்க்க ஈருடலும், ஓருடலாக்குகின்றான்.
              தலைவி இன்பக்களிப்பில் இன்புற்று மகிழ்ச்சி கடலில் நீந்தும் போதுதான்..“
”கொக்கரக்கோ!  கொக்கரக்கோ! கொக்கரக்கோ ! என்று சேவல் கூவுகிறது.              அதற்குள் பொழுது புலர்ந்து விட்டதா? நல்ல இனிமையான சூழலில் இந்த கொண்டைச் சேவல் கூவி தொலைத்து விட்டதே! என்று அலுத்துக் கொள்டாள். அலுத்துக் கொள்ளும் வேளையில் மிகச்சரியாக தோழியும் வந்து சேர்கிறாள்.ennathuli              , தன்  தோழியைப் பார்க்கிறாள்.   தோழியிடம்,  கதிரவன் மறைந்து வான் சிவந்தாலும், முல்லை மலர்கள் மலர்ந்திருக்கும் வேளையை மாலை என்கிறார்கள் பேதைகள்.  எனக்கு கொண்டைச் சேவல் கூவும் வேளையும், சுட்டெரிக்கும் பகல்வேளைக்  கூட மனம் மயக்கும் மாலைதான்  என்கிறாள் தோழி. அதைக் கேட்ட தோழியோ உள்ளுக்குள்ளே சிரித்துக் கொண்டே வெட்கத்தோடு ஓடுகிறாள்..  இப்படி வர்ணிக்கும் பாடல்தான் இது

                                சுடர்செல் வானமே சேப்ப, படர் கூர்ந்து
                                எல்லூறு பொழுதின் முல்லை மலரும்
                                மாலை என்மனார் மயங்கி யோரே !
                                குடுமிக் கோழி நெடுநகர்  இயம்பும்
                                பெரும்புலர் விடியலும் மாலை
                                பகலும் மாலை துணைஇ லோர்க்கே !”

குறுந்தொகையின் பாடல்


2 comments:

  1. அருமை ஐயா... எனக்கு பல குறள் ஞாபகம் வருகிறது...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிகவும் நன்றி சார்

      Delete

தங்களது கருத்து எனது ஊக்கம்

ஜோக்கீரர் – நகைச்சுவை கதை

                     ஜோக்கீரர் – நகைச்சுவை கதை               ” ஆயிராமாச்சே .. ஆயிரமாச்சே ! ” சோக்கா ! சோக்கா ! எனக்கே கிடைக்கணும் .. என...