2/26/2020

தாலாட்டு பாடல்கள் புத்தக நயம் கதிர்பாரதி கவிவேலன் தாலாட்டு


குருவினிலே திருவாகி வரவேண்டும் என்ற தாலாட்டுப் பாடலில் தாலாட்டில் வீரம் வேண்டும்தமிழ்ப் பாட்டு சோறுட்டும்!”  சோறுட்டுவதே தமிழ் என்கிறார் அன்னை இந்திராவின் வேகமும் ஜான்சி ராணி துணிவும்தேவை குழந்தை தாலாட்டில் வேகமும் துணிவும் ஊட்டி உள்ளார் தாலாட்டு பாடல்கள் புத்தக நயம்

கதிர்பாரதி  கவிவேலன் தாலாட்டு
தாலாட்டு பாடல்கள்
தாலாட்டு பாடல்கள் புத்தக நயம்   கதிர்பாரதி  கவிவேலன் தாலாட்டு 

மழலை மொழியை ஏது செய்வேன் -இதில் பல்லவியே சரளமாக தமிழ் விளையாடுகிறது. (-ம்)அதிசயம் நித்தம் நிகழ்வதற்குநல்ல ஆண்டவன் சாயலில் சிலரும் உண்டு
ஆணோ பெண்ணோ அறியவில்லை என்ற பாடலில்பஞ்சு மிட்டாய் போல் உன் தலைமுடிதான்பக்கம் வந்தால் கவர்ந்திழுக்கும்) குழந்தையின மென்மை படு அழகு
தாய்மொழி கசக்குமாடா? – என்ற தாலாட்டில் வளர்பிறை போல் நல்லநட்பு உன்னைத் தேடி வரணும்- என்று குழந்தைக்கு நட்பிற்கான இலக்கணத்தை தாலாட்டில் சேர்த்திருப்பது மிக அருமையாக உள்ளது.

பல்லாண்டு வாழ்ந்திட வேண்டுமடா? – இதில்
கவிதை போலவே கவிவேலாநீ
கன்னம்குழி விழ சிரிக்கிறாய்
கண்ணன் கைப்பொருள் குழலைப் போல
மழலை மொழியால் இனிக்கின்றாய்
குழந்தை தாலாட்டில் அந்த கண்ணனையும் கவிதையும் இணைத்திருப்பது நல்ல கவிதைத்தனமாய் மிளிர்கிறது.

தேவார சந்தமாஇதில்  காலம் உந்தன் சொல்லைக் கேட்கும்கனவுகள் நிசங்களாகும்தன்னம்பிகை ஊட்டி தாலாட்டுகிறார்.

குழந்தை மனசுல சாதி விதைகுழந்தை மனதில் சாதி விதையை தூவுவதை எதிர்த்துநேர்கொண்டு நீயும் சீர்கொண்டு பாரு- பார் போற்றி நீயும் பல்லாண்டு வாழ்கஅருமை.

வேற்றுமை இன்றி வாழ்ந்திட வேண்டும்வேதம் கீதம் அறிந்திட வேண்டும்வேற்றுமையின்றி வாழ்ந்திட வேண்டும்மத பேத த்தை உடைக்க தாலாட்டு பாடல் தடையின்றி வருகிறது.

விழிப்போடு நாளும் வாழ்ந்திட வேண்டும்  - என்ற தாலாட்டில் விழிப்பான தூக்கம் எந்நாளும் வேண்டும்விழிப்போடும் நாளும் வாழ்ந்திட வேண்டும்- (விழிப்போடு தூக்கம் என்பது ஆன்மிகத்தில் தியானம் என்பார்கள் அதைத்தான் தாலாட்டில் மறைமுகமாக குறிக்கிறார் என்றே கொள்ளலாம்)

தாலாட்டு பாடி தாயாகினேன்தொட்டி மீனாய் நீந்தாதேஎட்டி எட்டி பார்க்காதே! குறுகிய வட்டத்துக்குள் இருப்பதை மென்மையாக சொல்கிறார்.

ஊக்கம் என்பது இறைவன் தந்த்து.
தோல்வியெல்லாம் துன்பமில்லை கொடும் வெற்றி யெல்லாம் நிலைப்பதில்லைகொடும் என்ற வார்த்தை முரண்பாடாக தோன்றுகிறது.

அருளாளர் ஆசியோடுதஞ்சைத் தரணிநெல் விதைக்கும் பூமியைச் சொற்களால் போற்றி உள்ளார்.

தமிழ்ப்பாட்டு தினம் கேட்டுதாய்மொழிக் கல்வியை தங்கத்திற்கு உணர்த்தும் பாடல்.

மறுபடி உனக்காகஎன்ற தாலாட்டில் காசுதான் வாழ்வென்றால் காதல்மனம் கூடாதுவாழ்வு பிடிக்குமென்றால் கோபங்கள் கூடாதுபணத்தின் மாயையையும் சினத்தின் தீங்கையும் ஒரு சேர சாடியுள்ளார்.

வாழ்க நீ பல்லாண்டுநீ கிறுக்கும் கிறுக்குகளெல்லாம் ஓவியம் போல இருக்குதா!” (குழந்தையின் கிறுக்கல்கள் ரவிவர்மா ஓவியத்தைக் காட்டிலும் பெரிதா? என வினா எழுப்புகிறார்.

வீரத்திற்கு தேசிங்கை நினைவுப்படுத்துகிறார் ஒரு தாலாட்டில். இன்னொரு தாலாட்டில் உப்பு மூட்டை உனைத்தூக்கி நம்ம வீட்டைச்சுத்தி காட்டறேன்-உள்ளத்தின் சுமைக்குறைக்க உன்னையே சுமைக்கிறேன்!” எவ்வளவு துன்பம் இருந்தாலும் மழலையின் கள்ளமில்லா சிரிப்பைப் பார்த்தால் கரைந்து போகின்றது என்பதை தெளிவாக படம் பிடித்துள்ளார்.

        தாலாட்டுப் பாடல்கள் அனைத்தும் மிக அருமை.
        புத்தகத்தில் பெரும்பகுதி வாழ்த்துகள் இடம் பிடித்த்தில் இன்னும் நிறைய தாலாட்டு பாடல்கள் இடம் பிடிப்பதை தடை செய்து விட்டதோ என தோன்றுகிறது.

        அலைபேசி காலத்தில் இது போல நல்ல தாலாட்டுப் பாடல்கள் குழந்தைகள் கேட்டால் எதிர்காலம் வளமாகவும் நலமாகவும் அமையும் என்பது திண்ணம்.
         தமிழும் தாலாட்டும் வாழட்டும் தரணி புகழ் சேரட்டும்.

                            

No comments:

Post a Comment

தங்களது கருத்து எனது ஊக்கம்

ஜோக்கீரர் – நகைச்சுவை கதை

                     ஜோக்கீரர் – நகைச்சுவை கதை               ” ஆயிராமாச்சே .. ஆயிரமாச்சே ! ” சோக்கா ! சோக்கா ! எனக்கே கிடைக்கணும் .. என...