3/08/2020

மரக்குட்டி நூல் நயம் கருப்பு தங்கத்தின் கருத்து வைரங்கள்

            நெய்வேலி என்றதும் நினைவுக்கு வருவது கருப்பு தங்கம். அத்தோடு இவரையும் சேர்த்து கொள்ளலாம்.
           திரு. கி. ரவிக்குமார், ஆம், இவரும் கருப்புதான், பணி செய்வதும் கரிச்சுரங்கம்தான். ஆனால் இவரிடம் இருந்து படைப்புகள் வருவதோ கட்டித் தங்கம்தான். அப்படியான தங்கம்தான் இந்நூல்ennathuli மரக்குட்டி நூல் நயம் கருப்பு தங்கத்தின் கருத்து வைரங்கள்
 
https://ennathuli.blogspot.com
மரக்குட்டி நூல் நயம் கருப்பு தங்கத்தின் கருத்து வைரங்கள்


           மரக்குட்டி, வித்தியாசமான பெயர் கதைகளும் வித்தியாசம்தான்.


     வயசு 16 –
ஒரு தாய்க்கு தன் மகள். அவளின் வயது மீதான சந்தேகம், அந்த சந்தேகம் இறுதியில் உறுதியானதா?, இல்லையா என்பதுதான் கதையின் கருத்து. இதில் 15 வயசு அழகால மயங்குவா 25 வயசுஅறிவுக்கு மயங்குவா 35 வயசுபணத்துக்கு மயங்குவா 45 வயசு அன்புக்கு மயங்குவா 55 வயசுபக்திக்கு மயங்குவா 65 வயசு- பெண் மயங்குனா என்ன மயங்காட்டி என்ன என வகைப்படுத்தி பெண்களின் மனோபாவத்தை உளவியல் நிபுணரை விட அனுபவத்தைக் கொண்டு கதையில் பதிவிட்டிருப்பது மிகவும் சிறப்பு.motivated stories
நீதானா அந்தக்கிளி -  
தாய் தோற்றுப்போன அதே காதல் ஆயுத்த்தை ஏந்தி வந்து நின்றாள் அந்த மகள்கனவில் ஓர் கிளி பறந்து போவது போல கனவு அந்த கணவு மகள் காதலனுடன் பறந்தாளா? அல்லது கனவிற்கான அர்த்தம் என்ன ? ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணத்தை உண்மையாக்கியது நெகிழ்வான கதையாக அமைந்துள்ளது.
நினைவைத்தேடி-
ஓடிப்போனவர்களின் பிழைப்பு நூல் அறுந்த பட்டம் போல (காதல் மயக்கத்தில் ஓடிப் போனவர்களின் நிலை  பற்றிய கருத்தாக அமைந்துள்ளது) இயற்கையோடு உடம்பாலும் மனதின் உணர்வாலும் ஒன்றி கிடந்த மனிதன் முற்றிலும்  வளர்ச்சி என்ற பெயரில் தொடர்பற்று போய் விட்டான் என்பதைக் காட்டுகிறார்.
சே! கிழம் வீட்டுல இருந்தாலும் தொல்லை! இல்லாட்டியும் தொல்லை! இந்த வார்த்தை யாரிடமிருந்து வரும் என்பது படிக்கும் போதே அறிந்து கொள்ளலாம்.short stories
அங்கன ஊரே இல்லை இதை விட ஒரு கிராமம் அழிந்து விட்டதற்கு உதாரணம் வேறு கிடையாது.
செல்போன்
கழட்ட போகும் கடைசி கட்டத்திலும் செருப்பு மேலும் மிதிவாங்கியது. செல்போன் கேட்ட மகனை நேரடியாக கண்டிக்காமல், மறைமுகமாக உழைப்பின் பெருமை, பணத்தின் அருமை உணர்த்தி இருப்பது கதாசிரியரே அப்பாவாக வாழ்ந்திருக்கிறார் என்பதே உண்மை.
உறவுகள் தொடர்கதை
அலை பேசி காலத்தில் கடிதத்தை எதிர்பார்த்து அந்த கடித்த்தின் வார்த்தைகளில் அன்பு பரிவு கிடைக்காதா? என்று ஏங்கும் தாய். தாய்மையின் உணர்வை ஒவ்வொரு வரிகளிலும் உணர வைக்கும் சிறந்த கதை
அனிச்சம்
குடும்பத்தை நடத்தும்போது வெளி ஆள் நுழைந்தால் அந்த குடும்பம் என்ன ஆகும்? இதை லாகவமாக சுட்டி காட்டி உள்ளது. மேலும், நட்புக்கு இலக்கணம் தன் சோகம் மறைத்து  நண்பருக்கு மகிழ்ச்சி தருதல் என்பதை தகுந்த கதாபாத்திரங்கள் வாயிலாக கதை நகர்ந்திருப்பது நட்பிற்கு சிறப்பாக அமைந்துள்ளது.useful tips
சல்லிவேர்
அமெரிக்க வாழ்க்கை ஆடம்பர சொகுசுவாழ்க்கை என நினைப்பதை ஒரு கதாபாத்திரம் மூலம் உடைக்கிறார். மகனின் அமெரிக்க பண சம்பாத்யத்தில் தன் உழைப்பை மறக்கிறார், ஆதலால் அவருக்கு ஏற்படும் விளைவுகள்மதிக்கத்தக்க பள்ளி ஆசிரியரை எழுந்து வணங்கிய தந்தை தன் பணத்தால் அவரை வாத்தி கனேஷ் என்று அழைக்கும் போது மனதில் ஏற்படும் வலி. விவசாயத்தின் பெருமை அத்தனையும் ஒரு சேர சல்லி வேர், ஆணி வேராக நம் மனதில் ஆழமாக வேருண்றுகிறது.
பருவப் பேருந்து நிலையம்
     பேருந்து நிலையத்திற்கு பெயர் பருவப் பேருந்து நிலையமா? பருவப்பட்டாம்பூச்சிகளின் படபடப்பை நினைக்க வைக்கும் அதற்கு அதுதான் பொருத்தமான பெயர் என்று தலைப்பிட்டது மிகப்பொருத்தம்.Book riviews
அந்த பேருந்தில் உள்ள ஒர் குப்பைத் தொட்டி கூட அழகாக ஒரு வாலிபனுக்கு தெரியும் என்றால் அவன் காதல் மயக்கத்தில் உள்ளான் என்பதை அந்த வார்த்தை பளிச்சிடுகிறது. பருவகால நினைவுகளை வற்றாமல் அள்ளித்தரும் அட்சயபாத்திரமாக வழங்கி இருப்பதால் பருவப் பேருந்து நிலையம் மிகப் பொருத்தம்.
அன்பு மனம்
வறட்டு கௌரவமும், பணத்தைக் கணக்கு பார்க்கும் ஒரு பெண்மணிக்கு, வசதியில்லாத  பனிமலர் என்ற  பெண், தன் உண்மையான அன்பின் மூலம் அவளுக்கு உணர்த்தி அவளுடைய விழிகளிலும் கண்ணீர் துளி உகுத்த வைத்த கதைதான் இது. Astrological articles
மலையம்மா
அம்மாவின் முந்தானை கதகதப்பை விட வேறு எதுவும் அந்த சுகம் தராது.
பசி என்ற ஒன்று இருப்பதால்தான் வாழ்க்கையை ஓட்ட கஷ்டப்பட வேண்டி இருக்கிறது. அந்த கஷ்டத்தை ஒரு வயதான பெண் மலைப்பிரதேசத்தில் ஸ்வெட்டர் விற்று பிழைக்கிறாள். அவளை தன் தாயாக வணங்கி நிற்கும் கதாபாத்திரம் வாழும் கதைதான் இது.
மரக்குட்டி
பழகி விட்டால் வன்முறையும் இயல்புதான். பழகாவிட்டால் முத்தம் கூட வன்முறைதான்அருமையான வரிகள்.
குடும்பத்தில் எந்த பிரச்னையானாலும் அது அந்த இரவைக் கடந்து விட்டால் மறுநாள் எதுவும் இல்லை. என்பது யதார்த்தமான உண்மை.
மரம் குட்டிப் போடுமா, ஆம் போடும் என நிருபித்து உள்ளார் இயற்கையின் உணர்வுகளோடு விளையாடி மகிழ்ந்திருக்கிறார் கதாசிரியர்.
மானம்
நா மட்டுமென்ன? பஞ்சு மெத்தையில் படுத்து பணம் வாங்கியாறானா? ஆம்பள உன் உடம்புக்கு நூறு தேவைப்பட்டா?..... இங்கே சஸ்பென்ஸ் உழைப்பும் மானமும் உழைப்பாளி பெண்ணுக்கு இரு கண்கள் என்பதை வடிவு கதாபாத்திரம் வாயிலாக காட்டியிருப்பது கூடுதல் சிறப்பு.ennathuli
நூலாசிரியர்திரு. கி. ரவிக்குமார்.  குமதம் இதழில் கலக்குபவர். தம்மை 15 வயதில் விளையாட்டாக எழுத துவங்கினேன் என அறிமுகப்படுத்தி கொள்கிறார். ஆனதால் அவர் பிறக்கும் போதே கருவிலேயே கதைகளுக்கான கருக்களையும் சுமந்து கொண்டேதான் பிறந்திருப்பார் போலும்.
வெளியிடுபாவைமதி வெளியிடு
            எண்.55 ..சி நகர் மார்க்கெட் தெரு
                                 தண்டையார்பேட்டை, சென்னை-600 081
                                 94441 74272 ,  95001 14229
நூலின் விலைரூ.90
திரு.கி. ரவிக்குமார்அலைபேசி எண்.9443393536
                                                  மின்னஞ்சல்k.ravikumar39@yahoo.co

எழுத்தாளர்கள் ஒரு பார்வை - படிக்க கிளிக் செய்க

2 comments:

  1. புத்தகத்தை படித்த திருப்தியை தங்களின் விமர்சனம் தருகிறது. ஆயினும் புத்தகத்தை படித்தால் தான் முழு திருப்தி கிடைக்கும் என்பதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது.


    கே.ஆர். உதயகுமார், சென்னை-1.

    ReplyDelete
    Replies
    1. தங்களது மேலான கருத்துக்கு நன்றி

      Delete

தங்களது கருத்து எனது ஊக்கம்

ஜோக்கீரர் – நகைச்சுவை கதை

                     ஜோக்கீரர் – நகைச்சுவை கதை               ” ஆயிராமாச்சே .. ஆயிரமாச்சே ! ” சோக்கா ! சோக்கா ! எனக்கே கிடைக்கணும் .. என...