ஐயா, என் பேர் வேலன், சாப்பாட்டுக்கே வழி இல்லை, எனக்கு ஏதாச்சும் வேலை போட்டு
குடுத்தீங்கன்னா, வேலை செய்திட்டு, வயித்துக்கு ஏதாச்சும் ஊத்துனா
குடிச்சிட்டு கிடந்துடுவேனுங்கோ”காலில் விழுந்து கெஞ்சினான்.ennathuli சாதாரண வேலன்
மேனேஜர் வேலன் ஆனது எப்படி ?
சாதாரண வேலன் மேனேஜர் வேலன் ஆனது எப்படி ? |
காலில் விழுந்து கெஞ்சுவதைப் பாh;த்ததும், பரமசிவத்தின் மனைவி உள்ளே
இருந்தபடியே, “நம்ம
கடைல ஏதாச்சும் வேலைப் போட்டுக் குடுங்க, கடை வேலையும் பாத்துக்கிட்டு, வீட்டு வேலைக்கும் ஒத்தாசையா
இருக்கட்டுமே” என்றாள்.short stories
மனைவி சொல்லி விட்டாள்… மனைவி சொல்லே மந்திரம் என்ற டைப்
ஆசாமியாச்சே அமுல்படுத்த வேண்டியதுதானே
என்று வேலனை வேலைக்கு வைத்துக் கொண்டார் பரமசிவம்..
மறு நாள் காலை, அதிகாலையிலேயே வேலன் எழுந்து விட்டான். குளித்து விட்டு “ஐயா, கடையை நான் போய் திறக்கிறேன், நீங்க நேரஞ்சென்று வாங்கோ” என்றான்.
“பரவாயில்லையே, விசுவாசமாத்தான் இருப்பான்
போலிருக்கே”, என
பூரித்து போனார் பரமசிவம்.motivated stories
வியாபாரமும் நல்லாத்தான் செய்யறான்
என்பது புரிந்தது. சாப்பிட எது
கொடுத்தாலும் முகம் சுளிக்காமல் சாப்பிட்டான். சில நேரங்களில் வெறுங்கஞ்சி கொடுப்பாள். அதை அமிர்தமாய்
குடிப்பான். Useful tips
அப்படிப்பட்டவன்தான், ஒரு நாள், “அம்மா, வெறுங்கஞ்சி ஊத்தறீங்களே! சுடுசோறு
போடக்கூடாதா? “கேட்டான்.
அவனுக்கும் ”சோறு
திங்க ஆசை இருக்காதா?”, என்று பரமசிவத்தின் மனைவி சாப்பாடு பறிமாறினாள்.
சாப்பிட்டு முடித்தவனை, “வேலா!, இங்கே வாடா, சீக்கிரமா கடைக்கு போ” என அதட்டினார் பரமசிவம்.
அதற்கு, அவன், “என்னை டேய் வேலா-ன்னு
கூப்பிடுறீங்களே! வேலா-ன்னு கூப்பிடக்கூடாதா? கேட்டான். ”இது என்ன புதுசா இருக்கே! என ஆச்சர்ய பட்டார் பரமசிவம் ennathuli ஒரு வாரம் கழித்து, “வேலா , இங்கே வா” என கூப்பிட்டார்; பரமசிவம்.
இப்போது, “இன்னாங்க எஐமான், என்னை வேலா-ன்னு கூப்பிடறீங்க, என் முழுப்பேர் வேலாயுதம் ஆச்சே” அப்படி கூப்பிடக்கூடாதா? எதிர்க் கேள்வி கேட்டான்.
அவன் கேட்டுக்கொண்டபடி, இன்னொரு நாள் “வேலாயுதம், வியாபாரம் எப்படி போகுது-ன்னு
கேட்டப்ப “ ஒங்க
கடையில மேனேஜர் வேலை செய்யறேன். இனிமேல்
மேனேஐர் வேலாயுதம்-ன்னு கூப்பிடுங்கோ” என்றான்.short stories in tamil
அவனின் நடவடிக்கையில் மாற்றம், இப்படி எதிர்க் கேள்விகள்…. பரமசிவத்தை யோசிக்க வைத்தது. மறு
நாள் காலை, கடை
சாவியை வாங்கி போனவன் பின்னாலேயே போய் பார்த்தார். அப்போது,
. பரமசிவத்தின்
கடையில் உள்ள சில பொருட்களை பக்கத்து தெருவில் உள்ள வீட்டில் பதுக்கி வைத்துக்
கொண்டிருந்தான். அவன் மாற்றத்திற்கான
காரணம் அவருக்கு புரிந்து விட்டது.
அவனை கடையில் இருக்க வைத்து விட்டு, பக்கத்து தெருவில் உள்ள வீட்டில்
உள்ள பொருட்களை இடம்மாற்றி வைத்து விட்டு, வழக்கம்போல கடைக்கு வந்து
வியாபாரத்தை கவனித்தார்
மறுநாள் காலை, “மேனேஜர்; வேலாயுதம் கடை திறக்க போகலீயா? -ன்னு கேட்டார் பரமசிவம்.
“போங்க, எஐமான், என்னைய “டேய் வேலா-ன்னே” கூப்பிட வேண்டியதுதானே? என்றான். Book reivew
பரமசிவம் மனதுக்குள்ளேயே சிரித்துக் கொண்டார்
No comments:
Post a Comment
தங்களது கருத்து எனது ஊக்கம்