3/24/2020

இராமர் பொய் சொன்னாரா –காரணம் என்ன தெரியுமா- good motivation in tamil

இராமர் பொய் சொல்லி இருக்கிறார் என்றால் நம்பவா போகிறீர்கள். என்ன கதை விடுகிறீர்களா? என்று கோபத்தோடு கேள்வி கேட்கவும் செய்வீர்கள் motivation articles இராமர் பொய் சொன்னாரா –காரணம் என்ன தெரியுமா- good motivation in tamil
 
https://ennathuli.blogspot.com
இராமர் பொய் சொன்னாரா –காரணம் என்ன தெரியுமா- good motivation in tamil
              கூனியின் துர்போதனையால் கையேயி, தசரதனிடம் இரண்டு வரங்கள் கேட்டது, அதன் பின் அந்த வரங்களை நிறைவேற்ற தசரதன் கண்கலங்கி இராமனிடம் ”மகனே! நான் உன் தாய்க்கு இரண்டு வரங்கள் அளித்து விட்டேன் அந்த வரங்கள் நிறைவேறுவது உன் கையில்தான் என்று கேட்கிறார்.
          என்ன வரங்கள் சொல்லுங்கள் தந்தையே என்று தலைவணங்கி நிற்கிறார் ராமர்.short stories
          ”நீ பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செல்ல வேண்டும் இரண்டாவதாக உனக்கு பதிலாக பரதனுக்கு முடிசூட்ட வேண்டும் என்கிறார்.
          அவ்வளவுதானே! இதோ புறப்பட்டு விட்டேன் என்று கிளம்புகிறார்.
          உடனே! சீதை.. நானும் வருகிறேன் என்று கிளம்புகிறார். ராமர் மறுக்கிறார். ராமர் இருக்கும் இடமே சீதையின் இருப்பிடம் என்று உறுதியாக சொல்கிறார்.
          அண்ணன் காடேகுவதா? இதோ நானும் புறப்பட்டு விட்டேன் என்று லட்சுமணன் உடன் புறப்பட தயாராகிறார். 
          தசரதனுக்கு ஒரு புறம் கவலையாக இருந்தாலும்.. தந்தையின் சொல்லைத் தட்டாத பிள்ளையைப் பெற்றிருக்கிறோமே! என்று கர்வப்பட்டார். இருந்தாலும் கண்களில் தாரைத்தாரையாக தண்ணீர் பெருக்கெடுத்த து. Common book review
                    தசரதன் அழுது புலம்பி கொண்டிருந்தார்.
 இதற்கு காரணமான மந்தரை என்னும் கூனி, கைகேயியை மக்கள் குறை சொன்னார்கள்.
          இலட்சுமணணுக்கு கோபம் பொத்து கொண்டு வந்தது. மக்கள் சொன்ன அதே கருத்தை முன்மொழிந்து  வாக்குவாதம் செய்தும் பலனில்லை.
          இராமரோ  அன்றலர்ந்த தாமரை மலராய் முகத்தில் புன்னகை சிந்தியவாறே ”தாய்  கைகேயி மற்றும் மந்தரை என்னும் கூனியை குறை கூற வேண்டாம்.  நான் காடேக வேண்டுமென்பது இறைவனின் கட்டளை. அதற்கு அவர்கள் கருவியாக இருந்திருக்கிறார்கள் என்று வனவாசம் செல்ல தயாரானார்.
          இராமர் காட்டுக்கு புறப்பட்ட பொழுது, அயோத்தி மக்கள் எல்லோருமே இராமரைப் பின் தொடர்ந்தனர். தேர் புறப்பட்டு சென்று கொண்டு இருந்தது.
          பின்னால் இருந்து குரல் சுமேந்திரரே, இரதத்தை நிறுத்தும், சுமேந்திரரே, இரதத்தை நிறுத்தும்.. என குரல், தசரத சக்ரவர்த்தியிடம் இருந்து வந்து கொண்டிருக்க
          இரதத்தை வேகமாக செலுத்து...இன்னும் வேகம்..என இராமன் சொல்ல, தேரோட்டி சுமேந்திரருக்கு இருதலைக் கொள்ளியாக... அப்பா, மகனுக்கிடையே ஊசலாடிக் கொண்டு இருந்தார்.
          மறுபடியும், இராமனிடம் இருந்து...
          இரதத்தை வேகமாக ஓட்டுங்கள்என்று சொல்லி விட்டு...
          ஏன் இரதத்தை நிறுத்தவில்லை என்று தசரத சக்ரவர்த்தி கேட்டால் நீங்கள் நிறுத்த சொன்னது என் காதில் விழவில்லைஎன்று சொல்லுங்கள் என்றார் இராமன்.
                        அன்று இரவு தமசா நதிக்கரையில், தம்பி இலட்சுமணன், சீதை ஆகியோருடன் தங்கினர்.
          மக்கள் பின்தொடர்ந்து வந்து அங்கேயும் தங்கி விட்டனர்.            .
                        சுமேந்திரரே, தம்மை பின்தொடர்ந்து வந்த மக்கள் கண்விழிப்பதற்குள் நாம் தேரில் ஏறி சென்று விடலாம்.
                        அப்படியும் மக்கள் கண்விழித்து கொண்டால், நாம் ஆயோத்திக்கு திரும்புவதுபோல பாவனை செய்துவிட்டு பின்னர் காட்டிற்கு போய் விடலாம்.
          இப்படியாக, சுமேந்திரரிடம் பொய் சொல்ல சொன்னதும், மக்களை திசைத் திருப்ப பாவனை செய்ததும் சத்தியவந்தன் இராமன் செய்த செயல்களா? என வியப்பீர்கள். Moral stories
          அவர் செய்தது, சுயநலத்தால் அல்ல. தந்தை தசரத சக்ரவர்த்தி குரல் கேட்டு, இரதத்தை நிறுத்தி இருந்தால், அவர் வற்புறுத்தி ஆயோத்திக்கு திரும்ப அழைத்து கொண்டு போய் விடுவாரோ? என்ற அச்சத்திலும்
          அதே போன்று மக்களும் தம்மைக் கட்டாயப்படுத்தி, அன்பினால் வசப்படுத்தி அயோத்திக்கு திரும்ப செல்ல நேரிட்டால்.....
          இந்த காரணங்களுக்காகத்தான் இராமர் அப்படி நடந்து கொள்ள நேரிட்டதாம்.
                        இதைத்தான் வள்ளுவ பெருந்தகையும், தவிர்க்க முடியாது நேரத்தில் பிறருக்கு ஆபத்து விளைவிக்காத சூழ்நிலையில் பொய்யுரைக்கலாம் என்று கூறியுள்ளாரே...
              ”பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
               நன்மை பயக்கு எனின் (292)

          வள்ளுவரின் வழியைத்தானே இராமர் கடைப்பிடித்துள்ளார்
ஆதாரம் - திருக்கோளுர் ரகசியங்கள்                ——- கே. அசோ

No comments:

Post a Comment

தங்களது கருத்து எனது ஊக்கம்

ஜோக்கீரர் – நகைச்சுவை கதை

                     ஜோக்கீரர் – நகைச்சுவை கதை               ” ஆயிராமாச்சே .. ஆயிரமாச்சே ! ” சோக்கா ! சோக்கா ! எனக்கே கிடைக்கணும் .. என...