ஜோக்கீரர் – நகைச்சுவை கதை
              ”ஆயிராமாச்சே..ஆயிரமாச்சே! ”சோக்கா! சோக்கா!
எனக்கே கிடைக்கணும்.. எனக்கே கிடைக்கணும்.
வர மாட்டீயே எங்கேய்யா போனே!
              பாண்டியன் ஜோக் போட்டி
வைச்சிருக்காராம! ஆயிரம் பொற்காசாம்”
                                                ”சோக்கா! சோக்கா” காது  கேட்காதே!
                                                அழைத்தது யார்?
                                                ”ஏன் நாந்தேன்,..
இருமி!”
                                                அழைத்ததன் காரணம்?
                                                பரிசாம், ஆயிரமாம்,
ஜோக்காம், பாண்டியன் அறிவிப்பாம்!
                                                ”இந்த ஊர்தானே!
தெரியாதா? ஒனக்கு!
                                                தெரியும் சொல்! என்ன வேணும்!?”
                                                ”அந்த ஆயிரமும் எனக்கே வேணும்!
                                                ”ஜோக் எழுதி பரிசு பெற வேண்டியதுதானே!
                                                “தோண மாட்டேங்குதே1“ என்ன செய்ய?”
                                                சரி அந்த ஜோக் நான் தந்தால்
வேண்ணாம்ன்னு சொல்வேனா?
வேண்ணாம்ன்னு சொல்வேனா?
                                                ”இந்தா பிடியும் ஜோக்”
                                                ”பேஷ் பேஷ் இந்த ஜோக் நீர் எழுதியதுதானே!
                                ”ஆம்! நானே சுயமாக எழுதியது
                                ”அப்ப! இந்த ஜோக்கை நீரே  கொடுத்து பரிசு பெற்றுக் கொள்ள வேண்டியதுதானே!
                                ”எனக்கு வேண்டாம்!
பொற்காசு ஆபத்தானவை
                                ”நீர்தான் இந்த ஜோக் எழுதியதற்கு ஆதாரம்?
                                ”வேண்டுமானால் சோதித்து பாரேன்!”
கேள்விகளை நீ
கேட்கிறாயா? இல்லை… நான் கேட்கட்டுமா?
                                ”நானே கேட்கிறேன் எனக்கு கேட்கத்தான் தெரியும்!
                                ”ஜோக்? என்பது என்ன? 
                                 
மற்றவரை சிரிக்க வைப்பது!
                                ஜோக்கின் தனித் தன்மை
                                ஹாஸ்யம் ஒன்றுதான்
                                ஜோக்கில் பிரிக்க முடியாதவை
                                ”மன்னர்களும் பதுங்கு குழிகளும்”
                                ஜோக்கிலும் சேர மறுப்பது
                                ”மாமியாரும்… மருமகளும்”
                                ஜோக்கிற்கு முக்கியம் எது
                                ”நச்சென்று நாலு வார்த்தைகள்”
                                ”கடி ஜோக்கென்றால் ..?
                                கடித்தாலும் அது ஜோக்குதான்
                ”சோக்கா! நீதான் ஜோக்காளி!
நான் ஒரு பேமானி!
                                மன்னரிடம் படித்து காண்பித்து ஆயிரம் பொற்காசுகள் பெற்றுக் கொள்
                                ”ஆயிரம் தரவில்லை என்றால்!?”
                                ”ஒரு ஐநூறாவது”
வாங்கி கொள்.
                                ”முதுகில் ஏதாவது தந்தால்”
                                ”என்னிடம் வந்து சொல்!
                                ”எப்படி வீங்கி இருக்குன்னு பார்க்கவா?“
       ”மன்னா ! பாண்டிய மன்னா இதோ நீங்கள் கேட்ட மாதிரி ஒரு ஜோக். நானே
கைப்பட எழுதியது… எழுதியது. எழுதியது.
              ”எங்கே படித்து காண்பி!
                                ”மன்னர்.. கன்னத்தில் என்ன கீறல்?
                                 வாளின் கீறலா?
                                மகாராணியாரின் நக
க் கீறல்கள்!”
                                ஹா ..ஹா..ஹா‘! யாரெங்கே. ஆயிரம் பொற்காசுகள்
கொண்டு வாரும்.
                     நிறுத்து மன்னா நிறுத்து
                     ஜோக்கில் பிழை உள்ளது
                     ”என்ன பிழை ? எழுத்துப் பிழையா? அல்லது பொருட் பிழையா?
       ”எழுத்துப் பிழை என்பது பராவாயில்லை.. பொருட்பிழை ஒரு
நாளும் பொறுத்துக் கொள்ள முடியாத து.
   ”சோக்கா! சோக்கா! நானே எழுதி தொலைச்சிருக்கணும்…ஒன்ன நம்பி… முதுகில தோலை உரிக்காம விட்டாங்களே!
                     ”ஏன் என்னாச்சு?
                     ”உம்முடைய ஜோக்கில் குற்றமாம்!”
                     ”என் ஜோக்கில் குற்றம் கண்டவன் எவன்?”
                     ”அவன்..இவன்! ஏகவசனம் வேண்டாம்.
                     ”ஓ! ஜோக்கீரரோ!” 
                     ”என்ன குற்றம் கண்டீர்? சொல் குற்றமா? பொருள் குற்றமா?
                     ”சொல் குற்றமாயின் பொறுத்து கொள்ளலாம், பொருட் குற்றம்!”
                     ”பொருளில் என்ன குற்றம் கண்டீர்?
                     ”உமது ஜோக்கில்… அரசரின் அந்தப்புரத்தில் அந்தரங்கமாக
நடந்த தைப் பொதுவெளியில் ஜோக்காக வெளியிட்டது குற்றமல்லவா?
                     ”அது குற்றமா? 
                     ”ஆம் குற்றம்தான் ! 
                     ”மகாராணியார் மட்டும்தான் நக்க் கீறல்கள் செய்வாரா?
                     ”இல்லை, எந்த உலகத்து பெண்கள் என்றாலும், கணவனின் மீது அதீத அன்பால் பிறாண்டி விடுவார்கள்.
                     ”எல்லா பெண்களுமா? 
                     ”ஏன்… ஜோக் எழுதும் முன்பு நான் அன்றாடம் வணங்கும்
”சோக்கா!” மனைவி கூட அப்படித்தான் செய்வார்.
                     ”உண்மையாக! … சத்தியமாக!
                     ”நான் அன்றாடம் வணங்கும் ”சோக்கா! மனைவி ”பாரு!வின் மீது ஆணையாக.
                     ”ஜோக்கீரரே! பாரும்! என்னை உற்றுப்
பாரும்!
                   ”சோக்கர்களுக்கெல்லாம் தலைவன் ஆனாலும் ஆகுக. ”ஒம்”
ஜோக்கில் குற்றம்தான்.. குற்றம்தான்.
                      ”ஜோக்கீரரே எழுந்திரும்!
            ”அடியேன் ! என்னை மன்னியும்! ஜோக்குக்கெல்லாம்..
”முதல்வனாக திகழும் ”சோக்கா! வணங்குகிறேன்.
                     ”சபாஷ்! ஒன் போன்றவர்கள் இருப்பதால்தான் மற்றவர்களின்
ஜோக்குகளை நகலெடுத்து பத்திரிகைகளுக்கு அனுப்புவது குறைந்து வருகிறது.
              ”வாழ்க ஜோக்கீரரே! வளர்க ஒம் ஜோக் தொண்டு!

ஜோக்கை சோக்காக ரசித்தேன் நண்பரே...
ReplyDeleteமிகவும் நன்றி சார் நீண்ட நாட்களுக்குப் பின் தங்களது கருத்து எனது ஊக்கம்
Deleteதங்களது பதிவு வெளியாவது எனது டேஷ்போர்டில் வருவதில்லை நண்பரே...
Deleteபழைய மோடலிலிருந்து மாற்றியதால் வரவில்லை போலும்.
இதுகூட தமிழ் வலைப்பதிவகம் வழியாக வந்தேன்.
சோக்கான சிறுகதை
ReplyDeleteHa.ha..
ReplyDeletethanks for comment
Deleteஹாஹாஹா சிரித்து ரசித்தேன்!
ReplyDeleteகீதா
நன்றி
Deleteநன்றி
ReplyDeleteதற்செயலாக தங்கள் தளம் வந்தேன்.
ReplyDeleteமுதல் பதிவாக என் கண்ணில் பட்டது இந்த ஜோக்கீரர் பதிவு. அருமை அருமை. இதே போன்று ஒரு சமையல் காரர் மாறுவேடத்தில் வந்திருந்த உணவு துறை அமைச்சர் மற்றும் கல்லூரி விடுதி வார்டனுக்கும் இடையில் நிகழ்ந்ததாக ஆல் இந்தியா ரேடியோ- வானொலி நாடகத்திற்காக நான் எழுதி நடித்து இயக்கிய மேடை நாடக நிகழ்ச்சி நினைவிற்கு வந்தது.
கற்பனையும் வசனங்களும் அருமை. வாழ்த்துக்கள்.
தங்களுடைய கருத்திற்கு நன்றி
Delete