ஓவியர் கேண்டிடோ போர்டினரி ஓவியர்களில் தலைச்சிறந்தவர்கள் பலர் இருந்தனர். அப்படி
புகழ் பெற்றவர்களில் ஒருவர் கேண்டிடோ போர்டினரி என்பவர் 1903- 1972 காலக்கட்டத்தில்
பிரேசிலில் வாழ்ந்து வந்தார். அவரைப் பற்றி பத்து சுவாராஸ்யமான தகவல்களை தெரிந்து
கொள்ளலாமே!
ஓவியர் கேண்டீடோ போர்டினரி காண சொடுக்குக
1. போர்டினரி ஒரு காபி தோட்டத்தில் வளர்ந்தார். இவரின் பெற்றோர்கள்
ஜியோவன் பாட்டிஸ்டா மற்றும் மொமினிகாடொர்கோடோ ஆவார்கள். இவரது பொழுது போக்கு காபி
தோட்டத்தின் மண் மற்றும் நீல வானம் ஆகியவையே அவரின் உத்வேகமாக இருந்தன. அவரிடம்
எந்த புகைப்படம் தந்தாலும், அதை ஓவியமாக தீட்டி கைவண்ணத்தைக் காட்டுவதுதான்.
புகைப்படங்களிலிருந்து வரைந்தவைகதான் அவரின் அன்றாட கைசெலவுக்கு உதவியது. ரியோவில்
கலந்து கொண்டு தன்னுடைய அபாரத் திறமையைக் காட்டி பணம் ஈட்டினார். போர்டினரி
ஐயாயிரத்திற்கு அதிகமான கலைப்படைப்புகளை வரைந்தார். அவரது வாழ்நாளில் மிகச்சிறந்த
ஓவியராக திகழ்ந்தார். ஆனால் அவர் உயிருடன் இருந்த போது மிக குறைந்த எண்ணிக்கையில்
ஆன ஓவியங்களே விற்பனை ஆனது அவரது ஐரோப்பா பயணங்கள் அவரது வாழ்க்கையில் முக்கிய
அங்கம் வகித்த்து. அங்குதான் எஸ்கோலா நேஷனல் டி பெலாஸ் ஆர்ட்ஸிடமிருந்து தங்கப்
பதக்கத்தை வென்றார். அப்போது அவருக்கு வயது இருபத்தைந்து மட்டுமே. ஐரோப்பாவில்
அவரது ஓவியம் மின்னுவது போலவே காதலும் அவரின் மனதில் மின்னியது. ஆம், மரியா
மார்டினெல்ஸ்ஸை சந்தித்தார். அவரது ஓவியத்திறமையை அங்கிகரிக்கும் வகையில் பிரேசிலிய
ருபாய் தாட்களில் அவரது புகைப்படம் வெளியிட்டுஅதன் பிண்ணனியில் அவரது கலைப்படைப்பான
டிராடென்டிடஸ் இடம் பெற்றது மிகச்சிறப்பானதாகும். பின்னணியில் அவரது கலைப்படைப்பு
டிராடென்டெஸ் மூலம் கலைஞரின் முகம் இடம்பெற்றது. மோமாவில் அவரது ஒன் மேன் ஷோ
கலைகட்டியது. அந்நிகழ்வில் அவரது குழந்தையை சேகரிப்பாளராக பட்டியலிட்டது
சிறப்பானதாகும பிரேசிலின் மிகவும் பிரபலமான நவீன கலைஞன் என்று புகழப்பட்டார்.
1940-ம் ஆண்டில் நியூயார்க்கின் நவீன கலை அருங்காட்சியத்தில் தனது சொந்த
கண்காட்சியை நடத்தினார்.அந்நிகழ்வில் அந்த ஊர் ஆட்சியர் ஜோவோ கேண்டிடோ கலந்து
கொண்டு சிறப்பித்தார். பல சிறந்த ஓவியங்களை விற்பனைக்காக ஒதுக்காமல் குழந்தையின்
சேமிப்பாக ஒதுக்கியது அவரது ஓவியத்திறமைக்கும் மற்றும் அவரின் ஓவிய ஈடுபாட்டிற்கான
சான்றாகும். . இவரது திறமையை கேள்வி பட்டு ஐ.நா. சபை அவரின் ஓவியத்தை நன்கொடையாக
வாங்கி கொண்டது. வாழ்க்கையின் இறுதி நாள் வரை ஓவியத்திற்காகவே பாடுபட்டார். உடல்
நலத்தில் மோசமான தாக்குதல் நடைபெற்றதால், மருத்துவர்கள் ஓவியம் வண்ணப்பூச்சுகள்
தங்களுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் என்று எச்சரித்தும், ஓவியக் கலையை தன் மூச்சாகவே
வாழ்ந்து மறைந்த அவரைப் பாராட்டலாமே
No comments:
Post a Comment
தங்களது கருத்து எனது ஊக்கம்