பிக்பாஸ்-4
போட்டியாளர்களின் பிண்ணனி விவரங்கள் தெரியுமா?
தொலைக்காட்சிகளில் டிஆர்பியில்
ஒன்றையொன்று முந்துவதில் விஜய் டீ.வியும் அடக்கம்.
பந்தயத்தில் முதல் டி.வியாக வர அடிக்கடி சுவாரஸ்யமான
நிகழ்ச்சிகள்ள் நடத்துவதில் விஜய் டீவிக்கே உரித்தானது (சில நேரங்களில் அபத்தாமாகவும்
வில்லங்கமாகவும் இருக்கும். கத்திரிக்காய் வாங்கும் போது ஒரு சில சொத்தைகளும் வந்து
விடும் அல்லவா அது போல)
லாக்டவுன் காலத்தில் சற்றே இயல்பான இந்த கால கட்டத்தில்
பிக்பாஸ் 4 ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தொகுப்பாளர் வழக்கம் போல நம்ம ஆழ்வார்பேட்டை
ஆண்டவர் கமலஹாசன்தான். (அதே குறும்பு அதே இளமைத் துள்ளல்) மாறாத து.
ஏற்கனவே லாக்டவுன்ல பிக்பாஸ் வீடுமாதிரிதானே
இருந்தோம். இப்போ சாப்பாடு போட்டு பணமும் தந்து இருங்கன்னு சொன்னா கசக்கவா செய்யும்.
அப்படி வந்த போட்டியாளர்கள் யாரென்று பார்க்கலாமே!
ரியோ ராஜ் – சன் மியூசிக்
தொலைக்காட்சி தொகுப்பாளர், விஜய் டீ.வி சரணவன் மீனாட்சி தொடரில் நாயகன் சிவகார்த்திகேயன்
தயாரிப்பில் வெளியான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, பிளாண் பண்ணி பண்ணனும் படத்தில்
நடித்தவர்.
சனம் ஷெட்டி – 2016 –ம்
ஆண்டின் மிஸ் சவுத் இந்தியா – அம்புலி பட அறிமுக நடிகை தர்ஷன் ஆதரவாளர் (மீரா மிதுன்
இடத்துக்கு வந்து இருக்காரோ)
ரேகா – கடலோரக் கவிதைகள்
மொம்முகுட்டி அம்மாவுக்கு உள்ளிட்ட ஏராளமான தமிழ்படங்களில் நடித்துள்ளவர்.
பாலாஜி முருகதாஸ் –
2017 –ம் ஆண்டு பெர்பெக்ட் பட்டம். டைசன் படத்தில் தலைக்காட்டியவர் படம்தான் வெளிவரவில்லை.
அனிதா சம்பத் – செய்தி
வாசிப்பாளர். புன்னகை தவழும் முகம். சமூக வலைத்தளங்களில் இவருக்கென ரசிகப்பட்டாளங்களை
கொண்டுள்ளவர்.
ஷிவானி நாராயணன் – பகல்
நிலா, கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய படங்களில் நடித்தவர் – இன்ஸ்ட்டாகிராமில்
கலக்குபவர்
ரமேஷ் – சூப்பர் குட் பிலிம்ஸ்
ஆர.பி.சௌத்ரி அவர்களின் மகன். நடிகர் ஜீவாவின் சகோதர ர் ,புரொடியூசர் மகனா இருந்தாலும்
சான்ஸ் இல்லாமல் தவிப்பவர் (பிக்பாஸ் வந்துட்டார்ல கலக்குவாரா பார்க்கலாம்)
வேல்முருகன் – மிகச்சிறந்த
பாடகர் கணீர் குரல் ஏராளமான ஹிட் பாடல்கள் வாயிலாக புகழ் பெற்றவர். (பிக்பாஸ் வீட்டுக்குள்ளாற
பாட்டு கேட்கலாம் ஒரு தடையும் இருக்காதுல்ல)
ஆரி – ஜல்லிக்கட்டு போரட்டத்தில்
பங்கு கொண்டவர். சென்னை பெருவெள்ளத்தின் போது மக்களுக்கு உதவி செய்து மக்கள் மனதில்
இடம் பிடித்தவர். பிக்பாஸ் மனதில் இடம் பிடிக்கிறாரா பார்க்கலாம்)
சோம் சேகர் – இவர் ஒரு
மாடல் ஆல்பம் பாடல்களில் நடத்துள்ளவர். கன்டஸ்டென்ட் ஜாக்கிரதையாக இருக்கணும்…ஏன்னா
இவர் ஒரு குத்துசண்டை வீர ர் (பிக்பாஸ் கிட்ட ஏடாகூடாமா பேசினா இவரை அனுப்பி ஒரு வழி
பண்ணிடுவாரு)
கேப்ரில்லா – 3 படத்தில்
ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்தவர் ஜோடி நம்பர் 1 நடன நிகழ்ச்சி போட்டியாளர். பிக்பாஸ்-4-ன்
செல்லக்குட்டி என்று அழைக்கிறார்கள். போகப் போக தெரியும் இந்த பூவின் வாசம் புரியம்)
அறந்தாங்கி நிஷா – தன்னையே
கலாய்த்து கொண்டு ரசிகர்களை சிரிக்க வைப்பவர். விஜய் டி.வியின் நயன்தாரா என்கிறார்கள்.
(நயன்தாரா காதில் விழுந்துட போகுது) சிரிக்க வைப்பவரை பிக்பாஸ் அழ வைக்காம இருக்கணுமே)
ரம்யா பாண்டியன் – ஜோக்கர்
ஆண் தேவதை பட நாயகி . அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை கிறங்க வைப்பவர் குக்
வித் கோமாளியில் கலந்து கொண்ட போட்டியாளர்.
சம்யுக்தா கார்த்திக் –
மாடலிங், டி.வி நடிகை சிவில் என்ஜினியரிங், ஊட்டசத்து நிபுணர் பன்முக திறமை உள்ளவர்
(பிக்பாஸ் டாஸ்க்ல போட்டியாளர்களுக்கு சாப்பாடு தரலன்னா இவங்கிட்ட கேட்டுக்கலாம் என்ன
சாப்பிட்டா தெம்பா இருக்கலாம்ன்னு)
சுரேஷ் சக்ரவர்த்தி – ஆஸ்திரேலிய
வாசி, மெல்பர்ன் நகரில் ரெஸ்ட்ரெண்ட் நடத்துபவர் பாட்டிகள் ஜாக்கிரதை தொடரில் பாட்டியாக
நடித்தவர் போட்டியாளர்கள் ஜாக்கிரதை மாறுவேடத்தில் வந்து பயமுறுத்தலாம் எச்சரிக்கை
அது பிக்பாஸ் டாஸ்கா கூட இருக்கலாம்)
ஆஜித் – 2012 ம் ஆண்டு
சூப்பர் சிங் ஜூனியர் பட்டம் வென்றவர் பாடல் திறமையால் ரசிகப்பட்டாளம் ஏராளம் ஏராளம்.
பதினாறு
பேர்களையும் கட்டியாள ஒரு பிக் பாஸ் கலகமூட்ட பிக்பாஸ் கலகலப்பு.. கைகலப்பு… சண்டை
போர்களம் இத்தனையும் நடக்க போகுது பார்க்கலாம் பிக்பாஸ்.
No comments:
Post a Comment
தங்களது கருத்து எனது ஊக்கம்