அன்பே காதலி கோரிக்கை மனு அன்பே காதலி – கோரிக்கை மனு அன்பே காதலி! அதிரடியாய் மாயமானாய்! இராமன் தேடிய மாய-மானாய்! மணவாட்டியாய் வந்தாள் ஸ்மார்ட்டாக ஸ்மார்ட் போனாக வாட்டுகின்றாளே நாளும் வாஞ்சையாய் வைத்தாலுமே! என்னுடல் சார்ஜ் ஏறுதோ இல்லையோ ஏற்ற வேண்டுமாம் அவளுக்கு அடிக்கடி சார்ஜ் இல்லாவிட்டால் பொசுக்கென கோபம்! முகப்பொலிவுக்கு மேக்கப் பொலிவு குறையாதிருக்க காயம் படாதிருக்க டேம்பர்ட் கிளாஸ் அதைத் துடைக்க காலீன் கேட்கிறாளே! பேஸ்புக்ஈ டீவிட்டர்ஈ இன்ஸ்டா யூடியூப் லிங்க்ட் இன் இத்யாதி கேம்ஸ் எக்கச்சக்கம் வேற இவர்களை நான் பகைத்தாலோ நானோ வெறும் எம்ட்டி தான் அவள்தானே என்றன் எம்.டி அம்பானி, ஏர்டெல் வோடாபோன் இவர்களுக்கு அடிக்கடி மொய் செலவு இதற்கென நித்தம் உழைப்பு ஆகவே…அன்பே நீ அதிரடியாய் …….அதிகாலை என் கண்முன்னே வந்து நில்லடி அபிராமி….ச்சே…. பழைய காதலி நோக்கியாவே!