மணப்பாறை மாடு கட்டி
மாயவரம் ஏரு பூட்டி
வயக்காட்ட உழுது போடு
சின்னக்கண்ணு
பசுந்தழைய போட்டு பாடுபடு செல்லக்கண்ணு(2)
பாத்து வாங்கி விதை விதைச்சி
நாத்த பறிச்சி நட்டுப்போடு சின்னக்கண்ணு
இறைச்சி போடு செல்லக்கண்ணு
நாத்த பறிச்சி நட்டு போடு சின்னக்கண்ணு(2)
மருத ஜில்லா ஆள வச்சி
அறுத்து போடு களத்து மேட்டுல சின்னக்கண்ணு
நல்லா அடிச்சி தூத்தி அளந்து போடு செல்லக்கண்ணு
அட வேலையைப் பாருங்க
கருத நல்லா விளைய வச்சி
மருத ஜில்லா ஆள வச்சி
அறுத்து போடு களத்து மேட்டுல சின்னக்கண்ணு
நல்லா அடிச்சி தூத்தி அளந்து போடு செல்லக்கண்ணு
பொள்ளாச்சி சந்தையில ஆஆஆஆஆஆஆ(2)
நீயும் வித்துப் போட்டு பணத்தை எண்ணு செல்லக் கண்ணு(2)
செலவு பண்ண பக்குவமா
அம்மா கையில கொடுத்து போடு சின்னக்கண்ணு (2)
அவங்க ஆற நூறு ஆக்குவாங்க செல்லக்கண்ணு
பாடலாசிரியர் : மருதகாசி
இசையமைப்பாளர் : கே.வி.மகாதேவன்
பாடியவர் : டி.எம்.சௌந்தரராஜன்
Comments
Post a Comment
தங்களது கருத்து எனது ஊக்கம்