அலறியது…அரற்றியது
அழுது புரண்டது
ஐயோ! வெட்டுகிறானே!
என்ன செய்வதாய் உத்தேசமோ?
பள்ளி பிள்ளைகளை
பயமுறுத்தவோ?
சாக்கடை சகதிகளை
சுத்தம் செய்யவோ?
புலம்பிய பொழுதினில்
தணலில் வாட்டினான்!
கொடுமைக்காரா!
குமுறியது!
துளைகள் பல இட்டான்
துவண்டு ”படுபாவி” என சபித்தது
அலறி முடிக்கும் தறுவாயில்
அவன் கையிலொரு
அழகியதொரு புல்லாங்குழல்!
கிள்ளிப் பார்த்து கொண்டது
ஆம்…. நான் வாழ்கிறேன்
இனிய இசையாக என்றுமே
என மகிழ்ந்தது
மூங்கில்
Comments
Post a Comment
தங்களது கருத்து எனது ஊக்கம்