ஓடும் மீன்கள் விழியில் கண்டேன்
ஓர இதழில் புன்னகை கண்டேன்
பாடல் அதனில் இனிமைக் கண்டேன்
பாடும் அவளின் எழிலைக் கண்டேன்!
நாணம் தடுக்குது என்றாள் – மஞ்சள்
நாணினைக் கழுத்திலிட சொன்னாள்!
வேணுகானம் பிடிக்கு மென்றாள்!
வேணுவே நான்தான் என்றேன்!
ஆடும் அழகில் அபிநயம் கண்டேன்
ஆயக்கலைகள் அவளில் கண்டேன்
கூடும் உறவைக் காதலில் சொன்னேன்!
கட்டுக தாலி என்றே சொன்னாள்!
நிலவுப்பொழுதில் காத்து கிடந்தாள்
நெஞ்சம் நிறைய காதல் கொண்டாள்
மலர் மஞ்சணை வேண்டா மென்றாள்
மார்ப நெஞ்சணை போது மென்றாளே!
--கவிஞர் அசோகன்
https://ennathuli.blogspot.com
கன்னியும் புத்தகமும் புத்தகம் இதழ்களால் ஆனது கன்னியின் இதழ்களால் ஆனதே பக்கங்களை எச்சில் தொட்டு புரட்டுவது சிலரின் பழக்கம் கன்னியின் இதழ்கள் எச்சில் ஆக்குவது முத்தமாகும் புத்தகம் நூறு ஆசிரியருக்கு இனணயாம் கன்னியும் நூறு ஆசிரியருக்கு இனணயே கலவிக் கல்வியில் அச்செழுத்துக்கள் கண்ணைக் கவரும் “இச்”செழுத்துக்கள் கன்னத்தைக் கவருமே
Comments
Post a Comment
தங்களது கருத்து எனது ஊக்கம்