Skip to main content

காதல் பூட்டுக்கள் எங்கு பூட்டப்படுகிறது தெரியுமா?

காதல் பூட்டுக்கள் எங்கு பூட்டப்படுகிறது தெரியுமா? காதல் பூட்டுக்கள் எங்கு பூட்டப்படுகிறது தெரியுமா?காதல் பூட்டுக்கள் எங்கு பூட்டப்படுகிறது தெரியுமா? மனித இனம் தோன்றிய நாள் முதல் இந்நாள் வரை ஆணும் பெண்ணும் காதல் என்பது வரலாறு. அம்பிகாபதி அமராவதி காதல் லைலா மஜ்னு காதல் மும்தாஜ் ஷாஜகான காதல் இப்படி அமர காதல் காவியங்களைப் படித்துள்ளோம். காதல் நிலைத்திருக்க என்ன செய்ய வேண்டும்.? ennathuli 
ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும். நம்பிக்கை வேண்டும்.
காதல கதைகள் காதல் பூட்டுக்கள் எங்கு பூட்டப்படுகிறது தெரியுமா? அதெல்லாம் இருக்கட்டும் காதல் நிலைத்திருக்க ஒரு பழக்கம் உலகளவில் இருக்கிறது. அதுதான் காதல் பூட்டு. இந்த பூட்டு போட்டு விட்டால் காதல் நிலைக்கும் என்பது நம்பிக்கை. வீட்டிற்கு பூட்டு போடுவது வங்கிகளுக்கு பூட்டு போடுவது போவ்வ காதலுக்கு பூட்டு போடும் வழக்கம் இருக்கிறது உலகளவில் இருக்கிறது. நம்மூர்களில் கோவில்களில் குழந்தைப் பேற்றுக்காக தொட்டில் கட்டுவார்கள். சிலர் மரங்களில் மஞ்சள் துணிகளைக் கட்டுவார். ஆனால் பூட்டு போடுவது வித்தியாசம்தானே. வாங்க பார்க்கலாம்…..ஸாரி படிக்கலாம் வாங்க! காதலர்கள் தங்களுக்குள் பிரிவு (லேட்டஸ்ட் பாஷயில்) பிரேக் அப் ஏற்படக் கூடாது என்பதற்காக ஒரு பூட்டில் தங்களது பெயர்களை எழுதி… அந்த பூட்டை பொது இடங்களான ஆற்றுப் பாலம்,. பொதுவான இடங்களில் உள்ள வேலிகள் போன்ற இடங்களில் மாட்டி விட்டு, அந்த சாவியை ஆற்றில் அல்லது எங்காவது போட்டு விடுவார்களாம். இ.ந்தப் பழக்கம், பாரிஸ், ரோம், செர்பியா, உருகுவே, மற்றும் தைவான் ஆகிய நாடுகளிலும், உழைப்பின் சிகரமான ஜப்பானிலும் கடைப்பிடிக்கிறார்களாம். பாரிஸ் நகரில் மக்கள் நடைபாலம் மான்ட்டெஸ் ஆர்ட்ஸ் ல் காணலாம். இந்த பாலம் 1802 ல் கட்டப்ட்டதாகும். இதனடியில் சென் நதி ஓடுகிறது. காதலர்கள் தங்கள் பெயர்களை ஒரு பூட்டில் எழுதி விட்டு பாலத்தில் பூட்டி விட்டு சென் நதியில் வீசி விடுகிறார்களாம். இந்த காதல் பூட்டுகள் ஏராளமாக பெருகி பாலத்திற்கு சேதம் வரும் என்று பாரிஸ் மாநகரசபை இந்த காதல் பூட்டுகளை அகற்றி வருகின்றனராம். ”மாநகர பணியாளர்களே, காதல் பூட்டுகளை அகற்றி….. காதலுக்கு இடையூறாக இருக்காதீர்” என போரட்டம் நடந்தாலும் ஆச்சர்படுவதற்கில்லை. ரோமில் பான்டிமில்லியோ பாலத்தில் இத்தகைய காதல் பூட்டுகள் இருப்பதை இத்தாலிய எழுத்தாளர் பெட்ரிகோ மோகியோ தனது நூலில் குறிப்பிட்டுள்ளாராம். ஒரு வேளை இவரும் காதல் பூட்டு பூட்டி இருப்பாரோ?” செர்பியாவில். உர்ரிஜாக்காபன்ஜா என்ற இடத்தில் உள்ள பாலத்தில் நிறைய காதல் பூட்டுகள் காணப்படுகிறதாமட். இதனை மோஸ்ட்லிஜூபலி என அழைக்கிறார்கள். உ ண்மையான மோஸ்ட்லி பழக்கம் தான்.” தைவானில் ரயில் செல்லும் பாதைக்கு மேலே கட்டப்பட்டுள்ள பாலத்தில் காதல் பூட்டுக்கள் மாட்டப்பட்டுள்ளதாம். ரயில் செல்லும் பொழுது…. எழும் காந்தவீச்சு பூட்டையும், தங்களது காதலையும் பலப்படுத்தும் என்று தைவான் காதலர்கள் நம்புகிறார்களாம். ”ஏற்கனவே காந்த கண்ணால் கட்டிப் போட்டு விட்டு இந்த பூட்டையும் மாட்டி விடும் மங்கையர்களே! வெற்றி உங்களுக்குத்தான். உருகுவே நாட்டில் விரான்ஜி என்ற இடத்தில் செயற்கை நீருற்று அமைக்கப்ட்டுள்ளது. இதனைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள கம்பி வேலிகளில்… காதலர்கள் நீருற்றை ரசித்து விட்டு காதல் பூட்டுகளையும் கம்பி வேலியில் மாட்டி விடுகிறார்களாம்.. இந்த மாதிரி பூட்டு போடுவதால்… நிச்சயமாக காதலர்களுக்கு தங்களுக்கு காதல் தோல்வி ஏற்படாது என்று நம்புகிறார்கள் ஏஞ்சல்கள். இதைப் பார்த்து நம்மூரில் எத்தனை காதலர்கள் பூட்டு வாங்க கிளம்ப போகிறார்களோ ?”

Comments

Popular posts from this blog

கன்னியும் புத்தகமும்

  கன்னியும் புத்தகமும்   புத்தகம் இதழ்களால் ஆனது கன்னியின் இதழ்களால்   ஆனதே   பக்கங்களை எச்சில் தொட்டு புரட்டுவது சிலரின் பழக்கம் கன்னியின் இதழ்கள் எச்சில் ஆக்குவது முத்தமாகும்   புத்தகம் நூறு ஆசிரியருக்கு இனணயாம் கன்னியும் நூறு ஆசிரியருக்கு இனணயே கலவிக் கல்வியில்   அச்செழுத்துக்கள் கண்ணைக் கவரும் “இச்”செழுத்துக்கள் கன்னத்தைக் கவருமே                

மீராவின் காதலிலே காதல் கவிதை

மீராவின் காதலிலே காதல் கவிதை ennathuli   மீராவின் காதலிலே   காரத்திலே ஓர்சுவை உண்டு கற்கண்டிலே இனிப்பு உண்டு சீரகத்திலே செரிக் கின்ற சீர்மிகு ஆற்றல் உண்டு சீரதிகம் கேட்கும் அண்களின் சிந்தையிலே சோம்பல் உண்டு மீராவின் அன்புக் காதலிலே மெய்மறக்கும் கண்ணன் உண்டு கம்பனவன் சொல் நயத்தில் கவிகள் பலவும் உண்டு கொம்பனவன் யானையிடம் மூர்க்க குணமும் உண்டு நம்பும் பேர் வழிகளுக்கு நிச்சயம் கடவுள் உண்டு வம்பளக்கும் மாந்தர்களுக்கு கொட்டு பல உண்டு!

ஜோக்கீரர் – நகைச்சுவை கதை

                     ஜோக்கீரர் – நகைச்சுவை கதை               ” ஆயிராமாச்சே .. ஆயிரமாச்சே ! ” சோக்கா ! சோக்கா ! எனக்கே கிடைக்கணும் .. எனக்கே கிடைக்கணும் . வர மாட்டீயே எங்கேய்யா போனே !