Skip to main content

சுமைதாங்கியின் பாரத்தைச் சுமந்த பெண்


சுமைதாங்கியின் பாரத்தைச் சுமந்த பெண்  
  அடர்ந்த காடு, எங்கு பார்த்தாலும் பச்சைப்பசேலென்று கண்ணைப் பறிக்கும் வயல்வெளிகள்,  சலசலவென கொட்டும் அருவிகள் கொண்ட ஊரை  யாருக்குத் தான் பிடிக்காது.
https://ennathuli.blogspot.com
சுமைதாங்கியின் பாரத்தைச் சுமந்த பெண்  

                       
ஆனால், அந்த ஊருக்கு சட்டென்று யாரும் போக முடியாது, சரியான பாதை கிடையாது. அந்த மலைக்கிராமத்தில் வாழும் மக்கள் மலையை விட்டு அவ்வளவாக இறங்குவது கிடையாது. பேருந்து வசதி கிடையாது.ennathuli

                                    பாக்கு மரங்களும், தேக்கு மரங்களும் அணிவகுத்து நிற்கும், பழமரங்களில் அணில்களும், கிளிக்கூட்டங்களும் கூச்சலிட்டவாறே பழவகைகள் கொத்தி தின்னும் அழகை ரசித்து கொண்டே வந்தாள் கனகு, ஆமாம், அவளை அப்படித்தான் அந்த மலைக்கிராமத்தில் செல்லமாக கூப்பிடுகிறார்கள்.
                        அசலூரில் இருந்து அந்த கிராமத்தின் இளைஞனுக்கு வாழ்க்கைப்பட்டு வந்தவள், கிராமத்தை சுற்றிசுற்றி வந்தாள், ரசித்தாள், ஆடினாள், பாடினாள். இதெல்லாம் அவளால், அவள் பிறந்த வீட்டில் செய்யமுடியாது. அவள் வாழ்ந் த்தோ நகரம், நகரத்தின் இடுக்கு வீட்டில் வாழ்ந்தவள் short stories
                                             சோலைக் காற்றில் சுதந்திரமாக சுவாசித்து மகிழ்ந்தாள்.
                        அப்படி ஒருநாள், புழுதிமண் சாலையில் போய்க் கொண்டிருந்தவள், ஒரு மேடையினை பார்த்தாள்.
                        ஆச்சர்யமாக இருந்த்து. அங்கிருந்தவரை பார்த்து கேட்டாள்.
                        அண்ணே, இது என்ன ? மேடைமாதிரி இருக்கு, இது எதுக்கண்ணே உபயோகப்படும்-ன்னுகேட்டாள்
                        அதற்குஇது ஒரு சுமைதாங்கி, ஊர்ல போறவங்க, வருகிறவர்கள், தலையில ஏதாச்சிலும் சுமை வைச்சிருந்தா, இதை அதுமேல இறக்கி வைச்சுட்டு,  களைப்பாறின பின்னாடி எடுத்துகிட்டு  போவாங்க, அதுவில்லாம, இதுதான்ம்மா இந்த ஊருக்கே பிரசவ மேடை-ன்னும்,இந்த ஊர்ல வாழ்க்கைப்படுற பொண்ணுங்க அம்மா வீட்டுக்கு போய் பிரசவம் பாக்கிறதில்லே. முதல் பிரசவம்ன்னாலும் இந்த மேடைதான்ன்னு  சொன்னார் ஒருவர்.motivated
                        இன்ணாண்ணே, சுமைதாங்கிங்கறீங்க, பிரசவ மேடைங்கறீங்கபுரியலையே என்றாள்.
                        ஏம்மா, நீ இந்த ஊரு மருமகதானே, ஒனக்கு பிள்ளைப்பேறு நடக்குமில்லே, அது எதுல நடக்குதுன்னு அப்போ நீயே தெரிஞ்சுக்குவே என்று விளக்கமாகவும் சொன்னார்.
                        கனகுக்கு உள்ளுற பயமாயிருந் த்து. “நம்மூர்ல ஆஸ்பித்திரில பிரசவம் பார்க்குறதுக்கே ஊர்சனங்கள் பயப்படாறங்க, இங்கே, சுமைதாங்கில பிரசவமா? அதிர்ச்சியோடு, ஆச்சர்யமும் அவளுக்குள் ஆக்கிரமித் த்து.
                                    அப்படிப்பட்ட கிராமத்தில் அன்று புழுதிபறக்க மண்சாலைகளில், ஜீப்புகள் வரிசைக்கட்டி வந்து நின்றன. இதுவரை எட்டிப்பார்க்காத அரசியல்வாதிகள் எல்லாம் ஒட்டுமொத்தமாக கிராமத்தை குத்தகைக்கு எடுத்ததுபோல கூட்டம் போட்டு களேபரபடுத்தினார்கள்.
                        ஆம், தேர்தல் நடைபெற இருந்தது. அந்த ஊரில் ஆயிரத்து சொச்சம் ஓட்டுகள் இருந்தன. அத்தனையும் அள்ளிக் கொள்ளத்தான் அணிவகுத்து வந்தன வாகனங்கள்.
                         ஒருவர் பேசினார்…. “நீங்க எல்லாரும் ரொம்ப கஷ்டப்படுறீங்க, ஆதனால, ஒங்க மலைக்கிராமத்துக்கு பள்ளிக்கூடமும், ஆஸ்பித்திரியும் கட்டித்தாரோம், அதனால, ஒங்க ஓட்டையெல்லாம் எங்களுக்கு போடுங்கஎன்று வாக்கு சேகரித்தார்.
                        தேர்தல் நாள் வந்த து, அப்பாவி மலைவாழ் மக்களும், பள்ளிக்கூடமும், ஆஸ்பித்திரி வந்துவிடுமென்ற நம்பிக்கையில் ஓட்டுச்சீட்டுகளை வஞ்சனையின் போட்டார்கள்.
                        ஒரு அரசியல்வாதி வெற்றி பெற்று பதவியிலும் அமர்ந்து விட்டார்.
                        அவருடைய உதவியாளர், “அண்ணே, மலைக்கிராமத்து எப்ப போய் மக்களுக்கு நன்றி  சொல்றதுண்ணேஎன்று கேட்டார்.
                        அட போப்பா, அந்த மலைக்கிராமத்துக்கு போய் வாரதுக்குள்ளே தாவூ திர்ந்திடுப்பா, பிறவு பார்த்துக்கலாம்முடிஞ்சா நம்ம நிதில ஒரு ஆபிஸ் கட்டிக்கிட்டா, வெயில் காலத்துல ஒருவாரம் போய் நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு வரலாம் என்று முடித்து கொண்டார்.
                            வாழ்க்கையின்  பந் த்த்தை பலப்படுத்த மசக்கையானாள் கனகு.
                        கனகுவின் வயிறு பெருத்த து. அங்குள்ள வயதான கிழவியொருத்திதாள் பிரசவம் பார்ப்பாள். அதுவும், அந்த சுமைதாங்கிதான் அந்த கிழவிக்கு பிரசவ மேடை.
                        கனகுவிற்கு பிரசவ வலி ஆரம்பித் த்து. துடித்தாள். வலியால் அலறினாள்.
                        கிழவிக்கு துணையாய் நாலைந்து பெண்களை கூட்டிக்கொண்டாள்.
கனகுவிற்கு பிரசவம் பார்க்க சுமைதாங்கிக்கு அருகே தூக்கி கொண்டு போனார்கள். 
                        பொறும்மா, இதோ, இன்னும் கொஞ்ச தொலைவுதான் என்று ஆறுதலாக கூறிக்கொண்டே போனார்கள்.  நெருங்கி  விட்டது சுமைதாங்கி மேடை.
                        ஆனால், ….. யாரும்மா நீங்க, தொலைவா  போங்க, மேல கில விழுந்துடபோகுதுஎன்று அவர்களை விரட்டினார்கள் வேலையாட்கள்.
                         இன்னாப்பா, இந்த  பிள்ளைக்கு பிரசவம் இங்கனதான் பார்க்குறது, நீ இன்னா பன்றே, அந்த சுமை  மேடையைஎன்று கேள்வி கேட்டாள் கிழவி
                        ஏய் கிழவி, தூரமா அவள தூக்கிட்டு போ,….
                               .எங்க எம்.எல்.. ஐயாவுக்கு இந்த சுமை தாங்கி இருக்கிற இடத்து பக்கத்துல , ஆபிஸ் கட்டப்போறாங்களாம், ஆதனால, இடைஞ்சலா இருக்கிற சுமைதாங்கியை இடிக்கிறோம்என்று சொல்லிக் கொண்டே கடப்பாரைகளால் சாய்ப்பதற்காக ஆயுத்தமாயினர். அரைமயக்கத்திலிருந்த கனகுவிற்கு, சுமைதாங்கி கூட கொடுப்பினை இல்லாமல் போயிற்று.
                        கனகுவை தூக்கி கொண்டு ஒரு மரத்தினடியில் படுக்க வைத்தனர், நான்கு பக்கமும் மறைப்புகட்டி….அவளின் பிரசவ வலியை மடைமாற்றும் முயற்சியாக ….அந்த சுமைதாங்கியின் வரலாற்றையும்…..அந்த கிராமத்து நினைவுகளையும் சொல்லிக்கொண்டே பிரசவம் பார்க்க ஆரம்பித்தாள். மருத்துவச்சி கிழவி.
                             அந்த கிராமத்தின் வரலாற்றையும், நினைவுகளையும், மருத்துவச்சி கிழவி வார்த்தைகளின் வழியே சுமைதாங்கி பிரசவித்துவிட்டு மரித்து போயிருந்த நேரத்தில் ..கனகு குழந்தையின் அழுகைக்குரல் அந்த மலைக்கிராமமே கேட்கும்படியிருந்த்து..  கனகு சுகமான சுமையை இறக்கி விட்டாள். ஆனால், அவள் மனதில் சுமைதாங்கியின் பாரம் ஏறியிருந்ததை பிரசவத்திற்கு பின்னும் உணர்ந்தாள்.short stories

                                                     மனைவி சாப்பாடு பரிமாறும் விதத்தில் இதையும் கிளிக் செய்து படிக்கலாமே                                                      


Comments

Popular posts from this blog

ஜோக்கீரர் – நகைச்சுவை கதை

                     ஜோக்கீரர் – நகைச்சுவை கதை               ” ஆயிராமாச்சே .. ஆயிரமாச்சே ! ” சோக்கா ! சோக்கா ! எனக்கே கிடைக்கணும் .. எனக்கே கிடைக்கணும் . வர மாட்டீயே எங்கேய்யா போனே !

உன் தோளில் சாய்ந்து- Un Tholil Saainthu

Actor Vijaykanth death poem