Skip to main content

பிரபல எழுத்தாளர் ஏகாம்பரத்தைத் திட்டிய மனைவி எழுத்தாளர் என்ன செய்தார் தெரியுமா ?(WIFE SHOUTED FAMOUS WRITER, WRITER WHAT TO DO)


               
                         பிரபல எழுத்தாளர் ஏகாம்பரத்தைத் திட்டிய மனைவி எழுத்தாளர் என்ன செய்தார் தெரியுமா ?(WIFE SHOUTED FAMOUS WRITER, WRITER WHAT TO DO)
      வீட்டிற்குள்ளேயே குறுக்கும்நெடுக்குமாய் நடக்கிறார் அடிக்கடி …..விட்டத்தைப் பார்க்கிறார்  தனக்கு தானே பேசிக் கொள்கிறார்ENNATHULI 


           அதைப்    பார்த்து.   என்ன ஆச்சு இந்த மனுசனுக்கு….நல்லாத்தானே இருந்தாரு-ன்னு  ஒரு வேளை கதை எழுதறேன் நிறைய யோசித்து மூளைக் கலங்கிடுச்சோ! என்ன ஆச்சோ இந்த மனுசனுக்கு என்று அவர் மனைவியையும்….. புலம்ப வைத்து விட்டார். எழுத்தாளர் ஏகாம்பரம்
           எழுத்தாளர் ஏகாம்பரம் இலக்கிய உலகில் பிரபலமானவர். அவர் ஒரு கதையை எழுதி பத்திரிகையில் வந்தால்… வாசகர்களிடமிருந்து குறைந்தது இருபது கடிதங்களாவது பத்திரிகைகளுக்கும்… அவருக்கு ஐம்பது கடிதங்களாவது வரும்.
            அப்படிப்பட்டஎழுத்தாளர்தான்  கொஞ்ச நாளாவே இப்படித்தான் இருக்கிறாரு… கோயிலுக்கு கூட்டிப் போய் விபூதி பூசி விடணும் என்று மனைவி வேண்டிக் கொள்ளுமளவிற்கு செய்து வருகிறார்
            மேடை தோறும் மாலைப் போட்டு புகழ்கிறார்கள் வீட்டுக்கு திரும்பும்போது ஒரு சால்வை அவ்வளவுதான் ..  …. போதிய வருவாய்தான் இல்லாத கவலையில் இப்படி ஆகி விட்டார். இதற்கிடையே
              பத்து நாட்களுக்கு முன்புதான் வங்கியில் இருந்து நோட்டிஸ் வந்த து. அதில் இம்மாத இறுதிக்குள் தாங்கள் வாங்கிய கடன் தொகையை வட்டியுடன் சேர்த்து செலுத்தா விட்டால் தக்க சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவுறுத்தப்பட்டிருந்த து.
                அதைப் படித்தவுடன்  சரியாக சாப்பிடுவதில்லை இரவிலும் நெடுநேரம் விழித்து கொண்டு இருக்கிறார் விரக்தியாக இருக்கிறார் நல்லா இருந்த மனுஷன் புத்தகம் வெளியிடுறேன்-னு கடன் வாங்கி வெளியிட்டு இப்படி மாட்டிக்கிட்டாரே என்று மனைவியும் கவலைப்பட்டார்.
           என்னங்க கவலைப்படாதீங்க என்னோட நகைகளை வேணுமின்ன வங்கியிலேயே வைச்சு கடனை அடைச்சிடுங்களேன் என்றார்.
           வேண்டாம்..வேண்டாம். நீயே நகையைக் கொடுப்பே திடிர்ன்னு கல்யாணம்..காட்சின்னு வந்தா கழுத்தில நகையில்லாம கல்யாணத்துக்கு போனா சங்கடமா இருக்கும்! ஒன்னைக் கட்டிக்கிட்டு என்னத்த கண்டேன் புலம்புவே. ஆதனால வேண்டாம் வேற ஏதாவது ஐடியா கிடைக்குதா ன்னு யோசிக்கிறேன் என்று யோசிக்க ஆரம்பித்தார்
           அப்படி யோசித்த போதுதான் அவர் மனதில் . திடிரென மின்னலைப்போல் அந்த யோசனை ஒன்று உதித்தது.
             மனைவியிடம் நல்ல பேர் வாங்குவதற்கான உத்திகளை அறிந்து கொள்ள ஆவலா ?  முன்பண தொகையினை அனுப்பி  வைத்தால், மறுஅஞ்சலில் உத்திகள்  அனுப்பி வைக்கப்படும்   என விளம்பத்திற்கான வாசகத்தை  சுறுசுறுப்பாக தயாரித்து பிரபல பத்திரிகைக்கும் அனுப்பி வைத்தார்..
        பத்திரிகை விளம்பரத்தைப் பார்த்தவுடன் எழுத்தாளர் வீட்டிற்கு மணியார்டர்கள் வந்து குவியத் தொடங்கின. இன்னாங்க எதுக்கு இவ்வளுவு மணியார்டர் வருதுபுதுசா என்ன புத்தகம் வெளியிட போறீங்கன்னு மனைவி கேட்டாள்.
       அதற்குஒண்ணுமே எழுத தோணாம இருந்தப்ப திடிர்ன்னு … மனைவிகிட்ட நல்ல பேர் வாங்க  உத்திகள் எழுதலாம் யோசனை வந்திடுச்சு அதைதான் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்திட்டேன். ஆனால். என்ன உத்தின்னுதான் புலப்படமாட்டேங்குதுஅதான் புரியாம  முழிக்கிறேன்  ஒனக்கு ஏதாச்சிலும் தோணுதா-ன்னு அவர் மனைவியிடமே கேட்டார்.
                 அதற்கு எழுத்தாளரின் மனைவி….. 
                எது செய்தாலும் கண்டுகொள்ளாதே, 
       மனைவி என்ன பேசினாலும் காதில்  வாங்காதே,
     மூன்றாவதாக, சாப்பிடுவதற்கு தவிர எதற்கும்  வாயைத் திறக்காதே
            அப்போ அந்த மூணு குரங்குகள் மாதிரி இருக்கணும்ன்னு சொல்றீயா கேட்டார் எழுத்தாளர் ஏகாம்பரம்.

           க்கும்.க்கும். அப்படியே வைச்சுகங்க எங்க அப்பாரு நீங்க எழுத்தாளர் பிரபலமா வந்து சம்பாதிச்சு நல்லா காப்பாத்துவாருன்னுதான் கட்டிக் கொடுத்தாரு. ஆனா நடக்கலே. அப்படித்தான் கொஞ்ச நாள் இருங்களேன் என்று சொல்லி விட்டு   இதுதாங்க அந்த  உத்திகள், கதை எழுதுறாறாகதை இதிலே பிரபலமான எழுத்தாளர்ன்னு வீடு முழுவதும் போட்டோவா மாட்டி வைச்சு என்னத்த பன்றது என முகத்தில் இடித்து முணுமுணுத்தாள்.

                அதற்கு  வாயைத் திறக்காமல்  ஆமாம்..ஆமாம். ஆமாம் நீ சொல்றதுதான் சரின்னு பலமாக தலையை ஆட்டிய பிரபல எழுத்தாளர் ஏகாம்பரத்தைப் பார்த்து அவர் மனைவி என்ன சொன்னார் தெரியுமா?
        பும்பும்..மாடுமாதிரி தலையாட்டுற மனுசன்கூட….எவ்வளுவுகாலம்தான் குப்பைக் கொட்டப் போறேனோ என்ற மனைவியின் பேச்சைக் கேட்டு எழுத்தாளர் ஏகாம்பரம் இருக்கும் இடம் தெரியாமல்…. படுக்கையறைக் கதவை இழுத்து தாளிட்டுக் கொண்டார்.
          வாழ வைக்கும் வார்த்தைகள்-சிறுகதை                   


Comments

Popular posts from this blog

ஜோக்கீரர் – நகைச்சுவை கதை

                     ஜோக்கீரர் – நகைச்சுவை கதை               ” ஆயிராமாச்சே .. ஆயிரமாச்சே ! ” சோக்கா ! சோக்கா ! எனக்கே கிடைக்கணும் .. எனக்கே கிடைக்கணும் . வர மாட்டீயே எங்கேய்யா போனே !

உன் தோளில் சாய்ந்து- Un Tholil Saainthu

Actor Vijaykanth death poem