Skip to main content

ஆட்காட்டி விரலின் மதிப்பு கூடுமானால் ஜனநாயகத்திற்கு வெற்றி


ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகின்ற தேர்தலில் மக்களின் முக்கிய துருப்பு சீட்டே ஒரு விரலில் அதாவது ஆட்காட்டி விரலில் மையிடுவது. தேர்தலில் வாக்களிப்பது. வாக்களிக்காமல் தவறுவது ஜனநாயகத்தின் கடமையை நிறைவேற்ற தவறுகிறோம் என்றே பொருள் கொள்ளலாம். ஆட்காட்டி விரலின் மதிப்பு கூடுமானால் ஜனநாயகத்திற்கு வெற்றிennathuli
https://ennathuli.blogspot.com
ஆட்காட்டி விரலின் மதிப்பு கூடுமானால் ஜனநாயகத்திற்கு வெற்றி 


          தேர்தல் அறிவித்து , பிரச்சார யுத்தத்திற்கான, போஸ்டர் சண்டைகள், சகட்டுமேனிக்கு வசைபாடும் வசனங்கள்….இவையெல்லாம் தயாராகிக் கொண்டிருப்பது, தேர்தல் களம் சூடுபிடித்து விட்டதையே காட்டுகிறது.

          எந்த கட்சி ஆட்சி பிடிக்கும் என்று கருத்து கணிப்புகள் ஜோதிடர்களின் ஜாதக அலசல்கள் பேட்டிகள் என்று போய் கொண்டே இருக்கிறது. அதை எல்லாம் பார்த்து கொண்டுதானே இருக்கிறீர்கள்.

     இவ்வளுவு நாள் நிம்மதியாய் உறங்கி கொண்டிருந்த இவர்கள் விழித்து கொண்டார்கள். விழித்து கொள்ள வேண்டிய மக்களோஇன்னும் உறக்கத்திலேயேதான் உள்ளனர்..   தேர்தல் நாளன்றாவது விழித்து கொள்ளுங்கள்  என்றால் அதுதான் இல்லை. Motivated
              ஒருநாள் விடுமுறைக் கிடைத்த்தே என உறங்குபவர்களும் உண்டு.  தேர்தல் வந்துவிட்டதே,  நாம் என்ன செய்யலாம், அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளதேஅதுபோன்று மக்களும் ஒன்று சேர்ந்து, தகுதியான தலைமையைத் தேர்ந்தெடுக்க கூட்டணி அமைத்து கொள்ளுங்கள்  ? இல்லை. என் தனிவழி என தனித்தனியே செல்ல வேண்டாம் மேலும், இராமன் ஆண்டாலும், இராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லைஎன்ற பாடலை மனதில் பதியவிடாதீர்கள் மக்களின் இந்த மனோபாவத்தைத்தான் அரசியல்வாதிகள் நன்கு பயன்படுத்தி கொள்கிறார்கள்.
                 மக்களுக்கு யார் நன்மை செய்வார்கள் என்பதைவிட, ”இலவச பொருட்கள் என்ன தரப்போகிறார்கள்என்பதில்தான் நாட்டம் கொள்ளாதீர்கள். அதையும் இலவச தொலைக்காட்சிகளில் கண்டுகளிக்க வேண்டாம் stories
                    இலவசத்தை நிராகரிக்க வேண்டும். இலவசம் என்பது. மக்களின் வரிப்பணம். இலவசம் என்ற பெயரில் ஒருநாள் ஆயூளில் முடிந்து போகின்ற  மிண்ணனு சாதனங்கள் சில நாட்களிலேயே காட்சிகள் தொலைந்துபோகும் தொலைக்காட்சி பெட்டிகள் இவற்றினை வாங்க முந்திகொண்டு படையெடுத்து வாங்கி வந்து பரணில் போடுவதில் மக்களின் வரிப்பணம் அல்லவா முடங்கி போகிறது.
              உழைப்பதில் நம்பிக்கை இல்லாதவர்கள்தான் இலவசத்தின்பேரில் ஆசை வைப்பார்கள். இலவசத்தை என்று நிராகரிக்கிறமோஅன்றுதான் சமுதாய முன்னேற்றம் ஏற்படும். இலவசங்களை ஓடோடிபோய் பெற்று கொண்டு  நாடு கடனில்       த த்தளிக்கிறதே என கவலைப்படுவதில் என்ன நியாயம் உள்ளது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.short stories
               தனிநபரின் சிந்தனைதான்….ஒட்டுமொத்த சமுதாயத்தின் சிந்தனையாக மாறி….. தகுதியான தலைமையைத் தேர்ந்தெடுப்பதற்கான நாள்தான் தேர்தல் நாள்.
          தேர்தல் நாள் வரும்வரை நன்றாக உறங்குங்கள். ஆழமாக கவலையேதுமில்லாமல் உறங்குங்கள்.  கவர்ச்சி நாயகிகளுடன்கூட கனவில் டுயட் பாடுங்கள்கவலையில்லை. உங்கள் ஒவ்வொருவரின் விரலையும் பிடித்துக் கொண்டுபோய் தேர்தல் வாக்குசாவடிக்குள் அனுப்பி வைப்பார்கள். திரும்பி பார்த்தால் ஆளிருக்க மாட்டார்கள் அதனால் தேர்தல் நாளன்று விழித்திருங்கள்.
               இலவச அறிவிப்புகள், கானல்நீர் கவர்ச்சி திட்டங்கள், அடுக்குமொழி சொல் அலங்காரங்கள், நா-நயங்கள்ஆகியவற்றையெல்லாம் மறந்துவிட்டு  ….. இறைவனை எப்படி  நிர்மலமான மனதோடு வழிபடுவோமோஅப்படி, எண்ணிக் கொண்டு கறைப்படியா கரங்களுக்கு சொந்தகார்ர்கள் யாரென அடையாளம் காணுங்கள்  உங்கள் ஒருவிரலுக்கான மதிப்பு கூடப்போகிறது. எனவே ஒருவிரலின்  நுனியைக் கவலையில்லாமல்  கறையாக்கி கடமையை ஆற்றுங்கள்,

Comments

Popular posts from this blog

கன்னியும் புத்தகமும்

  கன்னியும் புத்தகமும்   புத்தகம் இதழ்களால் ஆனது கன்னியின் இதழ்களால்   ஆனதே  

மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி

  மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி வயக்காட்ட உழுது போடு சின்னக்கண்ணு பசுந்தழைய போட்டு பாடுபடு செல்லக்கண்ணு(2)   ஆத்துரு கிச்சடி சம்பா பாத்து வாங்கி விதை விதைச்சி நாத்த பறிச்சி நட்டுப்போடு சின்னக்கண்ணு   தண்ணிய ஏத்தம் பிடிச்சு இறைச்சி போடு செல்லக்கண்ணு நாத்த பறிச்சி நட்டு போடு சின்னக்கண்ணு(2)   கருத நல்லா விளைய வச்சி மருத ஜில்லா ஆள வச்சி அறுத்து போடு களத்து மேட்டுல சின்னக்கண்ணு நல்லா அடிச்சி தூத்தி   அளந்து போடு செல்லக்கண்ணு                             ஏன்றா பல்லைக் காட்றீங்க                           அட வேலையைப் பாருங்க கருத நல்லா விளைய வச்சி மருத ஜில்லா ஆள வச்சி அறுத்து போடு களத்து மேட்டுல சின்னக்கண்ணு நல்லா அடிச்சி தூத்தி   அளந்து போடு செல்லக்கண்ணு   பொதிய ஏத்தி வண்டியில பொள்ளாச்சி சந்தையில ...

மீராவின் காதலிலே காதல் கவிதை

மீராவின் காதலிலே காதல் கவிதை ennathuli   மீராவின் காதலிலே   காரத்திலே ஓர்சுவை உண்டு கற்கண்டிலே இனிப்பு உண்டு சீரகத்திலே செரிக் கின்ற சீர்மிகு ஆற்றல் உண்டு சீரதிகம் கேட்கும் அண்களின் சிந்தையிலே சோம்பல் உண்டு மீராவின் அன்புக் காதலிலே மெய்மறக்கும் கண்ணன் உண்டு கம்பனவன் சொல் நயத்தில் கவிகள் பலவும் உண்டு கொம்பனவன் யானையிடம் மூர்க்க குணமும் உண்டு நம்பும் பேர் வழிகளுக்கு நிச்சயம் கடவுள் உண்டு வம்பளக்கும் மாந்தர்களுக்கு கொட்டு பல உண்டு!