4/19/2019

குழந்தைகள் மண்ணில் விளையாடட்டுமே children to play on soil


                          
                            வெயில் ஒரு பக்கம் வறுத்தெடுக்குது, தேர்தல்  கலாட்டா காதடைக்குது. இந்த அவஸ்தைல,  வாலுங்க தொல்லை தாங்கலேஎப்பத்தான் மறுபடியும் ஸ்கூல் திறக்க போறாங்களோ? என குடும்ப தலைவிகள் அங்கலாய்ப்பது காதில் விழுகிறது.ennathuli
https://ennathuli.blogpsot.com
குழந்தைகள் மண்ணில் விளையாடட்டுமே

                        வாண்டுகளை வெளியேயும் அனுப்ப முடியலே! வீட்லே இருந்தா, எதையாவது உடைச்சு போட்டுதுங்க, இல்ல, சென் போன்ல, கம்ப்யூட்டர்ல, ஒக்காந்துகிட்டு அழிச்சாட்டியம் பண்ணுதுங்கோ  இப்படி செல்போன்லயும், கம்ப்யுட்டர்லேயும்,  நாள்பூரா பாத்துகிட்டு இருந்தா, ”சோடா பாட்டில் கண்ணாடி போடவேண்டியதுதான்இதையெல்லாம்  வீட்டு மனுசன் எங்க கவனிக்கிறாருன்னும் புலம்புவதுதம்  புரிகிறது. குழந்தைகள் மண்ணில் விளையாடட்டுமே children to play on soil

                 ஆதனால, வாண்டுகள் விளையாட வெளியே விடுங்கள்.
                   நமது முந்தைய ஆட்டங்களான கோலி விளையாட்டு விளையாட்டுமே!
        சே, கோலி விளையாட்டா? அலட்சியப்படுத்தாதீர்கள்.children stories
                   கண்ணாடி கோலி குண்டுகள் விளையாடுவது ஒரு மிக சிறந்த பயிற்சியாகும்.  இதை விளையாடினால், கண்கள் துல்லியமாக பார்க்க இயலும்.  குறிபார்த்து இலக்கினை எய்யும் திறனும் வாய்க்கும். இந்த விளையாட்டு ஒரு மரத்தடியில் விளையாடினால், நிழலும் பாதுகாப்பாய் துணை நிற்கும்.

                   இந்த விளையாட்டில் உங்கள் பையன் தேர்ச்சி பெற்று விட்டால் அம்பு எய்தல் துப்பாக்சி சூடு போட்டிகளில் சுலபமாக வெற்றி பெறுவானே!

                   அடுத்து கிட்டிப் புள் விளையாட்டு. என்னது கிட்டிப் புள்ளா?
                   இந்த கிட்டிப்புள் விளையாட்டின் அடிப்படைதான் இன்றைய கிரிக்கெட் விளையாட்டு என்பது உங்களுக்கு தெரியாதா?

                                           ஒரு சின்ன மரக்குச்சி, அதனை இன்னொரு மரக்குச்சியால், ஒரு சிறிய குழியில் வைத்து, தள்ளி விடவேண்டும். அதற்கு பிறகு. சின்ன மரக்குச்சி பக்கவாட்டின் கூர்மையான பகுதியில் பெரிய மரக்குச்சியினால் தட்டினால் பறக்கும். அதனை கீழே விழாமல் தடுத்து, வெகுதூரம் பறக்கும்படி செய்ய வேண்டும். இதனையே இன்று ஒரு மைதானத்தில் கிரிக்கெட்டாக பந்தை வைத்து விளையாடுகிறார்கள்.motivated
                   இந்த விளையாட்டை பிள்ளைகள் ஒழுங்காக கற்றுக் கொண்டால் எதிர் காலத்தில் கிரிக்கெட் பிளேயராக வரலாம். அப்படி இல்லையென்றாலும் கவலைப்பட வேண்டாம். வளர்ந்து பெரியவன் ஆனதும்அவன் மனைவி கோபத்தில் வீசியெறியும் பூரிக்கட்டை தலையணை இத்யாதி பொருட்களை லாகவமாக தடுத்து விடலாம்தானே
  
                   வீட்டில், பழைய நோட்டு புத்தக காகிதத்தில் பட்டம் ஒன்ற செய்து கொள்ள அனுமதி தாருங்கள். அவற்றை திறந்த வெளியில் பறக்கவிட்டு வேடிக்கைப் பார்க்கட்டும். பட்டம் விடுவது ஒரு போட்டியாகவே சில பகுதிகளில் நடைபெறுகிறது. இது விபத்தைக் கூட உருவாக்கி விடும். ஏனென்றால், அதனைப் பயன்படுத்தும் நூலில் கண்ணாடி துண்டுகள், வஞ்சிர பசை இவை சேர்த்து தடவி விடுவார்கள். அவை நம் கழுத்தை அறுத்துவிடும். பிள்ளைகளுக்கு சாதாரண நூல் கண்டே போதுமானதாகும்.
                   பட்டம் விடுவதால், குழந்தைகள் வானத்தை அண்ணாந்து பார்க்கும் வாய்ப்பும், பட்டம் காற்றில் அல்லாடும்போது, அதை லாகவமாக கையாளும் திறமையும் கைக்கூடும். இது வாழ்க்கைக்கும் உதவும் அல்லவா?articles
                   பெண் குழந்தைகள் நொண்டியடித்தல் விளையாட்டு எவ்வளுவு வித்தியாசமானது. குழந்தைகளுக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்று. தன்னுடைய உடலை தன் கட்டுக்குள் வைக்கும் உத்திதான் இது. இதை விளையாட்டாக விளையாட சொன்னார்கள். தன் உடலையே கட்டுக்குள் வைக்கும் பெண்கள், தன் கணவர்மார்களை கட்டுக்குள் வைக்க தெரியாதா என்ன?
                   பல்லாங்குழி விளையாட்டு. இது ஒரு அற்புதமான கணிதவியல் விளையாட்டு. எப்படி சதுரங்க  விளையாட்டில் யோசித்து  செயல்படுகிறோமோ அப்படி நன்கு சிந்தித்து விளையாடும் விளையாட்டு இது.kids
      
                               நீச்சல் இந்த விளையாட்டு மிகவும் உடல் ஆரோக்கியத்திற்கும் சுறுசுறுப்புக்கும் உத்திரவாதம் தரும் விளையாட்டாகும். நீங்கள்  நகர்ப்புறத்தில் உள்ள நீச்சல் குளத்திற்கு அனுப்புவதை விட கிராமத்தில் உள்ள தாத்தா பாட்டி உள்ள கிராமங்களுக்கோ  சென்றால் அங்கு பெரிய கிணறு இருக்கும் அதனில் உள்ளுரில் பிள்ளைகள் நீச்சல் பழகும் தங்கள் கண்காணிப்பில் நீச்சல் பழகினால் பிற்காலத்திற்கு பயனுள்ளதாக அமையுமே games

       என்ன வாண்டுகளை விளையாட வெளியே அனுப்பிட்டு எட்டி எட்டி பாக்குறீங்களா, இதோ வந்துட்டாங்கஉள்ற கூட்டிக்கிட்டு போங்க. உடம்பெல்லாம் புழுதி. கவலைப்படாதீங்க. கறை படிவது நல்லது விளம்பரத்திற்கு மட்டுமல்ல. குழந்தைகளுக்குத்தான். மற்ற பிள்ளைகளோடு கறைபடிந்து விளையாடினால், மனதிலுள்ள பொறாமை, கோபம் போன்ற குணங்கள் காணாமல் போய்விடும்.
                   குழந்தைகளை உறவினர் வீட்டுக்கு அழைத்து செல்லுங்கள். தாத்தா பாட்டி வீட்டிற்கு அழைத்து செல்லுங்கள்  அதைவிடுத்து, ”அபாகஸ் சேக்கறேன், மியுசிக் கிளாஸ் சேக்கறேன்இருக்கிற மொத்த உங்கள் ஆசைகளை குழந்தைகள்மீது திணிக்காதீர்கள்.
                    குழந்தைகள், குழந்தைகளாக வளரட்டுமே!
                  
                         மரத்தின் சுயநல ஆசையால் என்ன நடந்த து                                                                 

No comments:

Post a Comment

தங்களது கருத்து எனது ஊக்கம்

ஜோக்கீரர் – நகைச்சுவை கதை

                     ஜோக்கீரர் – நகைச்சுவை கதை               ” ஆயிராமாச்சே .. ஆயிரமாச்சே ! ” சோக்கா ! சோக்கா ! எனக்கே கிடைக்கணும் .. என...