4/15/2019

நம்மூர் நாஸ்ட்ராம் யார் who is nostram of our nation


கல        கலிகாலமப்பா      இந்த காலத்துல இப்படியெல்லாம்தான் நடக்கும் என்பார்கள்.
        இப்படி நிறைய பேரின் வாயிலிருந்து வரும் வார்த்தைகளை நாம் கேட்டு வருகிறோம்.ennathuli
.  எதிர்காலத்தில் நிகழப்போகும் நிகழ்வுகளை எடுத்துகூறி உலகில் முன்னணியில் இருப்பவர் நாஸ்ட்டிராம் என்பது எல்லோருக்கும் தெரியும். Motivated article
https://ennathuli.blogspot.com
 நம்மூர் நாஸ்ட்ராம் யார்  


      அவர் சிறுசிறு பாடல்கள் வடிவில் எதிர்கால நிகழ்வுகளை தெரிவித்து அவைகள் நடைபெற்றதைக் கண்டு ஆச்சர்யப்படுகிறோம்.
       உதாரணமாக அண்மையில் நடைபெற்ற அமெரிக்காவின்  இரட்டை கோபுர தாக்குதலை முன்னரே இரும்பு பறவை என்ற பாடல் மூலம் வெளிப்படுத்தி இருந்தார். இது போல நிறைய சம்பவங்கள் உண்டு. இன்னும் நிகழப் போகும் சம்பவங்களுக்காக காத்திருக்கிறோம்.
அத அவரைப் போல . நம்மூரிலும் ஒரு நாஸ்ட்டிராம் வாழ்ந்திருக்கிறார். நாம்தான், நம்மூர் பொருட்களுக்கு, ஆட்களுக்கு முக்கியத்துவம் தரமாட்டோமே, அதுவும் கலிகாலத்தில் ஒன்றுதானே!short stories
      நமது நாட்டில் வீரப் பிரம்மேந்திர்ர் என்றும்போத்தலூர் புனிதன்என்று புகழ் பெற்றவர் வாழ்ந்து வந்தார் இவரின் காலம்  ஐந்நூறு ஆண்டுகளுக்கு முந்தையது என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்
      . இவர் எழுதிய நூல்தான்காலக்கியானம்என்பதாகும்.
      நாஸ்ட்டிராம் எப்படி எதிர்கால நிகழ்வுகளை துல்லியமாக கூறினாரோ, அதேபோல், இவரும்காலக்கியானம்என்ற நூலில் கூறியுள்ளார். அவற்றினை பற்றி அந்த காலத்தில் ஆட்சி செய்த நவாபு மன்னர் அவரிடம் அந்நூல் பற்றி விளக்கம் கேட்டதாகவும் அதற்கு இவ்வாறு விளக்கம் சொன்னதாகவும் நூல் கூறுகிறது.bakthi article
      .             இயற்கையில் எப்போதும் நல்லது ஒன்று இருந்தால் தீயவை ஒன்று இருக்கும். அப்படி இருந்தால்தான் உலக இயக்கம் இயங்கி கொண்டே இருக்கும் என்பது இயற்கையின் நியதி.
      இந்த கலிகாலத்தில்ஐயோ நாம எவ்வளவோ நல்லது செய்யறோம் ஆனால் நமக்கு சோதனை மேல சோதனைதான் என்றும் கெடுதல் செய்கிறவர்கள் நன்றாகத்தானே சுகபோகமாக வாழ்க்கிறார்கள் என்ற ஆதங்க பேச்சும் வெளிப்படுவதுண்டு. அப்படியான சூழலில்
      தீயவர்கள் அழியவும் தூய மனம் கொண்டோர் வாழம் வழிவகை செய்வதற்காகவே ஆண்டவன் மீண்டும் இப்பூவுலகில் அவதாரம் எடுப்பான் என்று சொல்கிறது நூல்
        வீரபோக வசந்தராயன்என்ற பெயரில் தம் சேவைகளைத் தொடர்வாராம்.
           இந்தியாவின் புனித த்தலம் என்றழைக்கப்படும் காசியில் இருக்கும் கற்சிலைகள் வாய்திறந்து பேசுமென்றும் சொல்கிறது நூல்book review
           மக்களிடையே நட்பு குறைந்து வணிக நோக்கம்தான் மேலோங்குமாம்.
           மூத்தோர் சொல் கேள்என்பதெல்லாம் மறைந்து ஒங்களுக்கு ஒன்றும் தெரியாது எங்களுக்கு எல்லாம் தெரியும் நவீன தொழில்நுட்பம் எங்கள் கையிலேஎன்று இளைய சமுதாயத்தினர் பேசுவார்களாம்.
           இது தவறு என்று தெரிந்தே மக்கள் தீமையைச் செய்ய துணிவார்களாம். கேட்டால் நாகரீகம் என்று உரைப்பார்களாம்.
           மக்களாட்சியில் நிறைய இடையூறுகளும் துன்பங்களும் மக்களுக்கு ஏற்படுமாம்.
           இயந்திரங்கள் தானே இயங்கி மனிதர்களின் வேலையை அபகரித்து தாமே செய்யுமாம். அதுதான் இப்போதுரோபோட்என்றழைக்கப்படுகிறது.
           இன்னும் சிறிது நாளில் ஆர்ட்டிபீசியல் இன்டலக்டுவல்என்ற இலக்கை நோக்கி மனிதர்களின் மகத்துவம் குறைக்கப்படுமாம்.
மன மனிதர்களின் தயவை நாடிவந்த மனிதர்கள்இயந்திரங்களுக்குவணக்கம் வைக்கும் நிலை எழுமாம்.
           நமது பாரம்பர்யமான இயற்கையின் உன்னதமான வேம்பு கசக்கும். ஆனால் எதிர்காலத்தில் இந்த வேம்பு இனிக்கவும் செய்யுமாம் என்கிறது காலக்கியானம் நூல்.
           எப்போதும் மேல்நோக்கி பயணிக்கும் தீ ஏழைமக்கள் குடியிருக்கும் பகுதிகளில் பரவு துன்பத்தை உண்டாக்குமாம்.
           ஆலயங்கள் எல்லாம் அராஜகத்தாரின் ஆக்கிரமிப்புகள் அதிகமாகுமாம்.
.          மதுவின் மயக்கத்தில் மக்கள் தங்கள் குடும்பத்தாரைக் கவனிக்காது மாண்டு மடிவார்களாம்.
           டைட்டானிக் கப்பல் மூழ்கியது போல சரக்கு கப்பல்கள் மூழ்கி பெருத்த பொருளாதார நஷ்டத்தை உண்டாக்குமாம்.
           ஆண்டுக்கு ஆண்டு சூறாவளியும் சுழல்காற்றும் வீசி மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்குமாம்.
     .          சிறு வயது பெண்கள் கூட தவறான நட்பினால் கர்ப்பமாகி அவற்றைக் கலைத்து விட மருத்துவர்களை நாடுவார்களாம்.
           தங்கம் தாராளமாய் புழக்கத்தில் வருமாம். ஆனால் தானியங்களும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுமாம்.
      .         உண்ணும் உணவுப் பொருட்களில் மாற்றம் ஏற்பட்டு விதவிதமான பெயரில் உணவு பண்டங்களை மக்கள் விரும்பி சாப்பிடுவார்களாம்.
           பெண்களைப் போக  பொருளாக்கி அதனை வைத்து வியாபாரம் செய்வோர் செழித்து செல்வம் சேர்ப்பார்களாம். அதனை கலைச் சேவை என்றும் கூறிக் கொள்வார்களாம்.
      .    புத்தகங்களெல்லாம் காணாமற் போய் விடுமாம்இப்போதுதான் டிஜிட்டல் இ-புக் இ-மேகசின் வந்து விட்டதே
      .    இப்படியெல்லாம் நடக்கும் என்று பல்லாண்டுகள் முன்னரே காலக்கியானம் என்ற நூலில் எழுதி வைத்து சென்று விட்டார்.
      அதெல்லாம்தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறதே

      .
     

No comments:

Post a Comment

தங்களது கருத்து எனது ஊக்கம்

ஜோக்கீரர் – நகைச்சுவை கதை

                     ஜோக்கீரர் – நகைச்சுவை கதை               ” ஆயிராமாச்சே .. ஆயிரமாச்சே ! ” சோக்கா ! சோக்கா ! எனக்கே கிடைக்கணும் .. என...