மீனு  தன் கணவன் முகத்தை பார்த்தாள். இத்தனை நாள் இருந்த தை விட அவன் முகம் மிக தெளிவாய் காணப்பட்டது.  அவனின் சுறுசுறுப்பான நடவடிக்கைகள் சந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கிறான் என்பதையும் அடையாளம் காட்டியது. Ennathuli பாட்டியை விரும்பும் பேத்தி ஷர்மிளா காரணம் என்ன? Granddaughter like grandma what’s the reason
. 
அதைவிட குட்டிப்பொண்ணு சர்மிளாவோ எட்டுமணி தூங்கி எழுந்திருக்காமல் அடம்பிடிப்பவள் அதிகாலை ஐந்து மணிக்கே எழுந்து அவளே தன் வேலைகளை முடித்து விட்டு வீட்டு வாசலுக்கும் உறாலுக்கும் நடமாடிக் கொண்டிருப்பதும் அவளின்  முகமோ பூரிப்பாய் இருந்த தைக் கண்ட மீனு அதிர்ந்தாள் short stories
             ஒரு குறையும் வைக்காமல்தான் இருவரையும் கவனிக்கிறேன். ஆனால் இருவரின் முகங்கள் இத்தனை சந்தோஷமாக இருந்த தில்லையே கவலைக் கொண்டாள்.
              அவர்கள் இருவர் சந்தோஷத்தில் மிதக்க    மீனுவுக்கு முகத்தில் பயம் ஒட்டிக் கொண்டது.
காரணம், மாமியாருக்கு... மாமியார் வருவதாய் தகவல்
             மாமியாரே
குடைச்சல்., இதில் மாமியாருக்கு மாமியாரா! ஐயோ வேண்டவே வேண்டாம் !”என்ன பாடுபட போகிறோனோ, என் தலை உருளுவது சர்வநிச்சயம்”
தானாகவே பேசிக் கொண்டாள்..useful articles பாட்டியை விரும்பும் பேத்தி ஷர்மிளா காரணம்
என்ன? Granddaughter like grandma what’s the reason
             ‘என்ன மீனு, தனியே பேசிக்கிற?
சங்கர் கேட்க
             உறிம்...எனக்கு
கிறுக்கு பிடிச்சுக்கிச்சு”  
             ”என்னது முறுக்கா? முறுக்கெல்லாம் அவங்க சாப்பிட மாட்டாங்க! அவங்க பல்லெல்லாம் கொட்டி போச்சே!” என்று கிண்டலடித்தான்.
          ”முறுக்கில்லேங்க! எனக்கு கிறுக்கு பிடிச்சுக்கிச்சுன்னேன்”
          ”கிறுக்கு பிடிச்சா அதுக்கும் அவங்க வைத்தியம் சொல்வாங்க அவங்க கையில நிறைய வித்தைகள் இருக்கு” என்று தம்பட்டம் அடித்தான்.
             ”போதும் ஒங்க தம்பட்டம்” என்று தம்ளரை வீசி எறிந்தாள். அவன் லாகவாக தப்பி வெளியேறி ஸீ யூ பேபி” என்றான்.
             தேங்க்ஸ் என்றாள்  நான் சொன்னது என்னோட கியூட்டுக்கு என்றான்.
             ஒரு வாரம்தானே அதற்கு பிறகு நான் ஒரு கைப் பார்க்கறேன் சவால் விட்டாள் மீனு.  ”சவால் என்று கை காண்பித்தவாறே , மாமியாருக்கு மாமியாரை
அதாவது கொள்ளுப் பாட்டியைக் கூட்டி வரப்போனான்.motivated stories
             மாமியாருக்கு மாமியாரான
கொள்ளுப் பாட்டி வந்தாள்.
              ஆட்டோவில் இருந்து இறங்கியவுடன் நேராக, படுக்கையறைக்கு போய்
உடமைகளை வைத்து விட்டு, சமையலறையை நோட்டம் விட்டார் கொள்ளுப்பாட்டி
              வாயிலிருந்து ஒரு வார்த்தை வரவேயில்லை. எல்லாமே
”உறிம்..உறிம்” முடித்துக் கொண்டு மீண்டும் படுக்கையறை போனவர்... ”மீனு, ஒன்
பொண்ணு சர்மிளா எப்ப வரும்? கேள்வியைக் கேட்டார்.
               நாலு மணிக்கு வரும் அத்தே, ”அத்தைக்கு..அத்தையை”
எப்படி கூப்பிடுவது என குழம்பி ”அத்தை” என்றே கூப்பிட்டாள்.
               நாலு மணிக்கு குட்டிப்பொண்ணு சர்மிளா வந்து ஓடிப்போய்
கொள்ளுப்பாட்டியிடம் ஒட்டிக் கொண்டாள்.
               சமையலறையில் இருந்து
”சர்மிளா குட்டி, பிராகிர“ஸ் ரிப்போர்ட் குடுத்தாங்களா, என்ன ரேங்க, மீனுவின்
கேள்வி படுக்கையறை வரை கேட்டது.
               .இரும்மா, பாட்டிக்கிட்ட பேசிக்கிட்டிருக்கேன் தொந்தரவு
பண்ணாதேம்மா”  குரல் கொடுத்தாள் சர்மிளா         
                சின்ன பொண்ணு, பாட்டி இருக்கிற தைரியத்துல மதிக்க
மாட்டேங்குது புலம்பி கொண்டாள்.
              புலம்பலுக்கு பின், சர்மிளா குட்டி, பாட்டிக்கு
”ஐானி, ஐானி” ரைம்ஸ்  சொல்லி காட்டு” என
மீனு சொல்ல
               அதெல்லாம் ஸ்கூல்ல மட்டும் வெச்சுக்கோ, நான் ஒனக்கு ஒரு கதை
சொல்றேன் கேட்டுக்கோ” கொள்ளுப்பாட்டி சர்மிளாவிடம் சொன்னாள்..
               ”அம்மாவும், அப்பாவும், எப்ப
பார்  வீட்டுப்பாடம் படி, பிராகரஸ்
ரிப்போர்ட், ரேங்க கார்ட் ” இதான் கேட்கிறாங்க. நீங்கதான கதை சொல்ல
வந்திருக்கீங்க. அதனால நீங்க இங்கேயே இருந்திடுங்கோ பாட்டி” என்றாள் சர்மிளா.         
                 சர்மிளா முகம் பிரகாசமாய்
மாறியதற்கான நியாயத்தை மீனு உணர்ந்தாள்..

Comments
Post a Comment
தங்களது கருத்து எனது ஊக்கம்