சிணுங்கி கொண்டேயிருந்த மொபலை ஆன் செய்தார் துப்பறியும் நிபுணரான மகேஷ்.
“ஸார், சீக்கிரமா ஸ்டேஷனுக்கு வாங்க” இன்ஸ்பெக்டரின் பேச்சில்
அவசரம் தெரிந்தது ஒரு டைரியின் குழப்பம் –துப்பறியும் நிபுணருக்கு உதவிய குழந்தை-child
help to detective officer
ஒரு டைரியின் குழப்பம் –துப்பறியும் நிபுணருக்கு உதவிய குழந்தை-child help to detective |
பைக் அறுபது கிலோமீட்டர் வேகத்தில் பறந்து, ஸ்டேஷனுக்குள் நுழைந்து, அதிலிருந்து இறங்கி உள்ளே போனார் மகேஷ் ennathuli
“வாங்க ஸார், நாங்க எவ்வளவோ முயற்சி செய்தோம், எங்களால முடியல, ஆதான் ஒங்களை கூப்பிட்டோம், இந்தாங்க இந்த கேஸ்க்கான பைல்” என்று ஒரு கத்தை பேப்பருடன் பைலைக் கொடுத்தார் இன்ஸ்பெக்டர்.
நின்று நிதானமாக ஒவ்வொரு தாட்களையும் படித்து பார்த்தார் மகேஷ். சில விவரங்கள் புரிந்ததுபோல் இருந்த்து. சில விவரங்கள் புரியாமலிருந்த்து. ஓரே குழப்பம்.
“இன்ஸ்பெக்டர் ஒரு டீ சொல்லுங்க” என்றார் மகேஷ்.
“அடடா, கேஸ் மும்முரத்தில மறந்துட்டேன் தப்பா நினைச்சுக்காதீங்க” என்றார்.
“இறந்தவள் இளம்பெண்
ரெஜினா, ஒரு கார்பரேட் கம்பெனியில் ஸ்டேனோகிராபராக வேலை. நல்ல சம்பளம். கூடவே அழகும், இளமையும் போட்டி போட்டுக்கொண்டு இருந்ததை போட்டோ
காண்பித் த்து.
“இன்ஸ்பெக்டர், வேற ஏதாச்சிலும் தடயம் கிடைச்சுதா“, என்றார்
“ஒரு டைரி கிடைச்சுது, அதில சம்பந்த சம்பந்தமில்லாதவாறு ஏறுக்குமாறா எழுதி வைச்சிருக்கு, அது அந்த பொண்ணோட கையெழுத்துதான் “ ன்னு
லேடிஸ் உறாஸ்டல்ல இருக்கிறவங்க சொன்னாங்க“ என்றார் detective stories
”கொண்டாங்க பார்க்கலாம்”ன்னு டைரியை வாங்கி பிரித்து பார்த்தார்.
ஒன்றாவது நாளில், “ ஒங்களை பார்த்து கொண்டே இருக்கலாம் போலிருந்த்த்து. அதற்கேற்ப நீங்களும் சீக்கிரமாய் வந்து விட்டீர்கள் என் ஆசையும் நிறைவேறின“ என்று எழுதப்பட்டிருந்தன..
இரண்டாவது நாளில்,…..அவளின் காதல் நினைவுகளை கவிதைகளாக வடித்திருந்தாள். முன்றாம் நாளில்,
முன்றாம் பிறை நிலாவின் படத்தை ஒட்டி வைத்து இருந்தாள்.
நான்காம் நாள் தாளில்….
“அன்பே, தாபத்தில் தவிக்கிறேன்
தணிப்பதற்கு தருவாயா இதழ் முத்தம், ஏங்கும் இளநெஞ்சு என்றிருந்த து.
ஐந்தாம் நாளில் குழந்தைகள் வரைவதற்கு பயன்படுத்தும் கிரையான் கலர் பென்சில் கொண்டு
ஜோடி புறாக்களை வரைந்திருந்தாள்
ஆறாம் நாளில், ஒரு ரோஜா மலரின் இதழ்கள் இருந்தன.
ஏழாம் நாளில்,
அழகான மயில்களின் வண்ணப்படங்கள் ஒட்டி வைக்கப்பட்டிருந்தன. Love stories
… எட்டாம் நாள் , டியர், ஒன்னை ரொம்பவே மிஸ் பண்ணிறேன் தோணுது, சீக்கிரமா நம்ம ல வ்வ ஒங்க வீட்டுல சொல்லிடு”
ஒன்பதாவது நாளில்
வானத்தில் ஏறுவது
போலுள்ள நூல் ஏணியின் புகைப்படம் இருந்த்து. “டியர், ஒன் வீட்டுல சொல்லிட்டியா? எப்போ நம்ம கல்யாணம், எங்க குடும்பத்தை பத்தி ஒங்க வீட்டுல விவரமா சொல்லிட்டியா….….. டியர், சீக்கிரமா ஒரு வழி செய்“ நாள் கடத்தினா, நான் தாங்கமாட்டேன்“. மீண்டும்….. “டியர், ஒன் வீட்டுல சொல்லிட்டியா? எப்போ நம்ம கல்யாணம், எங்க குடும்பத்தை பத்தி ஒங்க வீட்டுல விவரமா சொல்லிட்டியா டியர், சீக்கிரமா ஒரு வழி செய்“ நாள் கடத்தினா,
நான் தாங்கமாட்டேன்“ என்றிருந்த்து.. பின்குறிப்பாக தொடர்ச்சி
எட்டாம்
நாள் என குறிப்பிடப்பட்டிருந்தது.diary
. ஏழாம் நாளில் அடிக்குறிப்பாக… தொடர்ச்சி ஆறாம் நாள், அதன் தொடர்ச்சி ஐந்தாம் நாள், இப்படி முதல் நாளுக்கு அவனை கூட்டி சென்றது அவளின் டைரி.
அந்த டியர் யார்? அவன் பெயர் என்ன? அவனுக்கு எந்த ஊர்? என்ன வேலை? , கருப்பா, சிவப்பா, ஒரு விவரமும் இல்லாமல் மர்மக்கதையின் ஆரம்பம் போலவே இருந்த்து. அந்த டைரியே ஒரு மர்மக்கதையின் தொடக்கம் போலத்தான் தென்பட்டது மகேஷ்க்கு .
மகேஷ்க்கு குழப்பமாக இருந்த்து ஒரு வேளை அந்த பெண் முஸ்லீம் விட்டுல வளர்ந்தவளோ? வலமிருந்து இடமாக போகிறாளே என்று குழம்பினார்
அவள் காதலன் யார்? அவள் தற்கொலை செய்து கொண்டாளா? இல்லை கொலையா புரியாமல் தவித்தார் மகேஷ்.
ஓன்பதாவது நாளுக்கு பிறகு ஒரு வரி கூட எழுதவில்லை. இப்படி மர்ம மாக அவளும் இறந்து, நம்மையும் திக்குமுக்காட வைத்து விட்டாளே அந்த பெண் என்று புலம்பியவாறே, இன்ஸ்பெக்டர், ”அந்த டைரியை மட்டும் கொடுங்க, வீட்டுக்கு எடுத்து போய் பார்க்கிறேன். ஏதாவது தடயம் கிடைக்குதா ”என்று டைரியை வாங்கி தன்னுடைய லெதர் பேக்கில் வைத்து கொண்டு பைக்கில் வீட்டுக்கு
போனார் மகேஷ்.
வீட்டில்
டீபாயின் மேல் டைரியை வைத்து விட்டு குளிக்க போனார் மகேஷ்.
டீபாயின்
மேலிருந்த டைரியை பிரித்து ஒன்பதாவது பக்கத்தில் இருந்து படிக்க ஆரம்பித் த்து மட்டுமில்லாமல்…. ஒரு காகித்த்தில்…. ஒன்பது, அடுத்து ஒவ்வொரு
நாளாய் குறித்து வைத்து ஏதோ புதிர் விளையாட்டு போல
விளையாடிக் கொண்டிருந்தது மகேஷின் செல்ல பெண் குழந்தை.
குளித்து விட்டு வந்த மகேஷ், ”செல்லக்குட்டி, அந்த டைரிய வைச்சுடு கண்ணா, எழுதுவற்கு வேற
நோட்டு தர்றேன்” என்று வாங்கிய
போது, வாண்டுவின் கையில்
உள்ள தாளைப் பார்த்ததும், துப்பறியும் மூளையில் பளிச்.
“செல்லக்குட்டி, அந்த பேப்பரைக் கொடு”ன்னு பக்குவமாய்
வாங்கி பார்த்தான், ஒன்றும் புரியவில்லை… அதில்…. ஒன்பது…..எட்டு, ஏழு,
ஆறு,ஐந்து,நான்கு,மூன்று, இரண்டு, ஒன்று“ என்றிருந்த து.short
stories
எல்லாவற்றையும் இணைத்து பார்த்தான், எண்களின் தலைகீழ் வரிசையாக இருந்த து. இன்னும்
குழப்பம். ஒரு நிமிடம்
கண்களை மூடி யோசித்தான்.
மீண்டும் டைரியைப் பிரித்து படித்தான், டைரியில், ஒன்பதாம்
நாளில், இருமுறை எழுதியிருந்த்தை
பார்த்தவுடன், வாண்டு எழுதிய காகிதத்தில் ஒன்பதுக்கு முன்னால் இன்னொரு ஒன்பதை சேர்த்தான். “ஆடே, ஆச்சர்யத்தில்
கண்களை விரிந்தன அலைபேசி எண்ணாக இருக்கலாம் என்று தீர்மானித்து உடனே, இன்ஸ்பெக்டருக்கு போன் செய்துவிட்டு
ஸ்டேஷன் கண்ட்ரோல் ரூமிலிருந்து, அந்த அலைபேசி எண்ணை கண்காணித்து விவரங்களை சேகரித்தான்
”அந்த எண்ணுக்கு, ஒரு லேடி
கான்ஸ்டபிளை பேச சொன்னான்.
“அவள், ஸார்,
ஒங்க கேர்ள் பிரண்ட் ரெஜினா பிரண்ட் சரளா பேசறேன், ஒங்களை நேர்ல
பார்த்து முக்கியமான விஷயம் சொல்லணும், நேரு பார்க்குக்கு
வந்துடங்களேன்“ என்று கொஞ்சும் குரலில் குழைய குழைய பேசினாள். அந்த குழையலான
பேச்சுக்கு….. அவனும் குழைந்தான்..
நேரு பார்க்கில்….. லேடி கான்ஸ்டபிள் அழகாக டிரஸ் செய்து கொண்டு போய் காத்திருக்க…ஆவலுடன் வந்தான்
“என்னங்க, ஒங்க பிரண்ட்
ரெஜினாவை பார்த்து ரொம்ப நாளாச்சு, எங்கிருக்கா? “விசாரித்து கொண்டிருக்கும்போதே
ரவுண்டு கட்டினார்கள் போலிஸ்கார ர்கள் ரெஜினா காதலன் முகேசினை.
“தேங்ஸ் மகேஷ், இந்த கேஸை
முடிச்சு கொடுத்த தற்கு“ என்றார் இன்ஸ்பெக்டர்.
”தேங்க்ஸ்-ல்லாம் வேண்டாம், ஒரு பேமிலி பேக் ஐஸ்கிரிமும், நாலு பெரிய பாக்கெட் காட்பரிஸ் சாக்லெட்டும் வாங்கி கொடுங்க போதும்” என்றார் துப்பறியும் நிபுணரான மகேஷ்.
”என்னங்க மகேஷ், சின்ன குழந்தையாட்டம், ஐஸ்கிரீமும், சாக்லேட்டும்” என்றார் இன்ஸ்பெக்டர்.
”கண்டுபிடிக்கறதுக்கு
க்ளு கொடுத்த்து என்
பெண் குழந்தைதானே என்றார்” துப்புறியும் நிபுணரான மகேஷ்.
No comments:
Post a Comment
தங்களது கருத்து எனது ஊக்கம்