ரக்ஷா பந்தன் “ராக்கி”என்ற பெயரில் பிரபலமாகி இந்தியாவில் வடமாநிலங்களில் அமோகமாக கொண்டாடப்படுகிறது.ennathuli
இந்த பண்டிகை ஒவ்வொரு ஆணும்..பெண்ணும் சகோதர சகோதரிகளாக பாவித்து அவர;களின் கையில் ஒரு சிறிய கயிற்றைக் கட்டுவதன் வாயிலாக தங்களின் சகோதர பாசத்தை வெளிப்படுத்துவதுடன்… பெண்கள் தங்களை சகோதரன் எப்போதும் பாதுகாப்பாக இருப்பான் என்பதை உறுதி ஆக்கி கொள்கிறார;கள்.
ரக்ஷா பந்தன் பண்டிகை அல்ல - உறவை பலப்படுத்தும் திருவிழா
ரக்ஷா பந்தன் பண்டிகை அல்ல - உறவை பலப்படுத்தும் திருவிழா |
இந்த ஆண்டு நமது இந்தியா சுதந்திர தினத்தன்று இந்த பண்டிகை நிகழ்வது கூடுதல் சிறப்பாகும். காலை 5.54 முதல் மாலை 5.59 வரை இப்பண்டிகை கொண்டாடுவதற்கு சிறந்த நேரமாகும்.motivated
stories
இந்த பண்டிகை முழு நிலவு நாளில் அதாவது பௌர;ணமி நாளில் கொண்டாடப்படுகிறது. ஆந்நாள் ராக்கி பூர;ணிமா, நாரியல் பூர;ணிமா மற்றும் காஜரி பூர;ணிமா என்று மாநிலத்திற்கு ஏற்றவாறு அழைக்கப்படுகிறது. அமர;நாத் யாத்திரை செல்பவர;கள் குரு பூர;ணிமாவில் தொடங்கி ராக்கி பூர;ணிமாவில் முடிவுக்கு வருகிறது.
இந்திய புராணப்படி இந்த பண்டிகையை பல்வேறு காரணங்களால் கொண்டாடப்பட்டாலும், முக்கிய நிகழ்வாக பின் வரும் நிகழ்வே முதன்மையாக உள்ளது. Useul tips
தேவர; உலகத்தின் அதிபதியான இந்திரனுக்கு;; ராக்கி கயிற்றைக் கட்டிக் கொண்டால் தேவர;களுக்கும் அசுரர;களுக்கு நடக்கும் யுத்தத்தில் அந்த கயிறு பாதுகாப்பாக இருக்கும் என்று தேவ குரு பிரகஸ்பதி அறிவுரை வழங்கி இருக்கிறார;. அதை சசி தேவி நம்பிக்கை கொண்டு இந்திரனின் கையில் கட்டி விடுகிறார;.
அதே
போல இன்னொரு புராண கதையும் செவி வழியாக உலா வருகிறது. இந்த ரக்ஷா பந்தன் பண்டிகை கடல் கடவுளான வருண பகவானை வேண்டி கடலின் கடற்கரை ஓரம் தேங்காய் பழம் ஆகியவை படைத்து மீனவர;கள் வேண்டுதலை நிறைவேற்றி கொள்கின்றனர;. இந்த பண்டிகை நாரியல் பூர;ணிமா என்றழைக்கப்படுகிறது.
மற்றொரு சிறப்பு புராண கதையாக, கிருஷணர; ஒரு சமயம் காற்றாடி விட்டு மகிழும்போது.. அவரின் விரல் வெட்டுப் பட்டதாகவும், அதனை பார;த்து பதறி திரௌபதி தன்னுடைய புடவையின் ஒரு பகுதியை கிழித்து அவருடைய விரலில் கட்டுப் போட்டு விட்டாராம். அந்த நெகிழ்வில் மகிழ்ந்த கிருஷ்ணர;…
உனக்கு ஆபத்து வரும் நேரத்தில் என்னை அழைத்தால் ஓடோடி வந்து உதவுவேன் என்று வாக்குறுதியும் அளித்தாராம். அந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டும் இப்பண்டிகை கொண்டாடுகிறார;களாம்.ennathuli
இந்த பண்டிகை இந்தியாவின் பல்வேறு வடமாநிலங்களிலும் கொண்டாடப்படுகிது. தென்பகுதியில் இப்பண்டிகை ஆவணி அவிட்டம் என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.
இப்பண்டிகையின் சிறப்பிக்க அஞ்சல் துறை ஆண்டு தோறும் சிறப்பு கவர;களை அச்சடித்து “ரக்ஷா பந்தன் “
கயிற்றை அனுப்ப மேலும் உதவி செய்து வருகிறது.
“சகோதர பாசம் மென்மேலும் வலுவடைய ரக்ஷா பந்தனை
கொண்டாடுவோமே
பொங்கல் பண்டிகையும்..நினைவாற்றல் முத்தண்ணாவும்
No comments:
Post a Comment
தங்களது கருத்து எனது ஊக்கம்