Skip to main content

Posts

Showing posts from July, 2025

மகிழ்ந்தது மூங்கில்

  அலறியது … அரற்றியது அழுது புரண்டது ஐயோ !  வெட்டுகிறானே ! என்ன செய்வதாய் உத்தேசமோ ?   பள்ளி பிள்ளைகளை பயமுறுத்தவோ ? சாக்கடை சகதிகளை சுத்தம் செய்யவோ ? புலம்பிய பொழுதினில்   தணலில் வாட்டினான் ! கொடுமைக்காரா ! குமுறியது !   துளைகள் பல இட்டான் துவண்டு  ” படுபாவி ”  என சபித்தது   அலறி முடிக்கும் தறுவாயில் அவன் கையிலொரு அழகியதொரு புல்லாங்குழல் !   கிள்ளிப் பார்த்து கொண்டது ஆம் ….  நான் வாழ்கிறேன் இனிய இசையாக என்றுமே என மகிழ்ந்தது மூங்கில்